சியோமி,ரியல்மி கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க: பட்ஜெட் விலையில் 5G டேப்லெட் அறிமுகம் செய்தது Lenovo.!

|

லெனோவா நிறுவனம் புதிய லெனோவா டேப் பி11 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 5ஜி டேப்லெட் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் சியோமி,ரியல்மி டேப்லெட் மாடல்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல்.

11-இன்ச் 2கே டிஸ்பிளே

11-இன்ச் 2கே டிஸ்பிளே

லெனோவா டேப் பி11 5ஜி மாடல் ஆனது 11-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2000x1200 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 5ஜி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம்.

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

மேம்பட்ட செயல்திறன் வழங்கும்

மேம்பட்ட செயல்திறன் வழங்கும்

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி சிப்செட் சிப்செட் உடன் Adreno 619 GPU ஆதரவைக் கொண்டு இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

கம்மி காசில் காதை அலறவிடும் பாஸ்.! Fire Boltt Fire Pods Ninja 601 இயர்போன்ஸ் விற்பனை.! விலை என்ன?கம்மி காசில் காதை அலறவிடும் பாஸ்.! Fire Boltt Fire Pods Ninja 601 இயர்போன்ஸ் விற்பனை.! விலை என்ன?

டால்பி அட்மோஸ்

டால்பி அட்மோஸ்

Lenovo ப்ரிசிஷன் பென் 2 ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் பி11 5ஜி மாடல். குறிப்பாக டால்பி அட்மோஸ் ஆதரவுடன் JBL ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். குறிப்பாகத் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா டேப் பி11 5ஜி மாடல்.

தரமான சிப்செட் வேணுமா இருக்கு, அருமையான கேமரா வேணுமா இருக்கு - ரெடியா இருங்க வருது புதிய Samsung போன்.!தரமான சிப்செட் வேணுமா இருக்கு, அருமையான கேமரா வேணுமா இருக்கு - ரெடியா இருங்க வருது புதிய Samsung போன்.!

13எம்பி ரியர் கேமரா வசதி

13எம்பி ரியர் கேமரா வசதி

புதிய லெனோவா டேப் பி11 5ஜி மாடல் ஆனது 13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமாவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் ஃபேஸ் அன்லாக் செய்ய ToF சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல்.

256ஜிபி ஸ்டோரேஜ் வசதி

6ஜிபி/8ஜிபிரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

டிவி ரிமோட்க்கு பேட்டரி மாத்துறீங்களா? இந்த ட்ரிக் தெரிஞ்சா உங்க டிவிக்கு ரிமோட்டே தேவையில்லை.!டிவி ரிமோட்க்கு பேட்டரி மாத்துறீங்களா? இந்த ட்ரிக் தெரிஞ்சா உங்க டிவிக்கு ரிமோட்டே தேவையில்லை.!

7700 எம்ஏஎச் பேட்டரி

7700 எம்ஏஎச் பேட்டரி

7700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். மேலும் 20W QC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

மனச கல்லாக்கிகோங்க.. 5G-க்காக செய்த செலவை சமாளிக்க Jio, Airtel திட்டங்களின் மீது கட்டண உயர்வு! இனிமேல்?மனச கல்லாக்கிகோங்க.. 5G-க்காக செய்த செலவை சமாளிக்க Jio, Airtel திட்டங்களின் மீது கட்டண உயர்வு! இனிமேல்?

Lenovo Tab P11 5G விலை

Lenovo Tab P11 5G விலை

5ஜி, 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். 6ஜிபி ரேம் கொண்ட Lenovo Tab P11 5G மாடலை ரூ.29,999-விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டை ரூ.34,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தை லெனோவா இணையதளம் மற்றும் அமேசான் தளத்தில் வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Lenovo Tab P11 5G tablet with 11-inch display Launched: Specs, Price and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X