வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!

|

மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றிற்குள் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவுவதற்காக ஆட்டோவை நேரடியாக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

மக்கள் அதிகம் பயணிக்கும் எலக்ட்ரிக் ரயில்

மக்கள் அதிகம் பயணிக்கும் எலக்ட்ரிக் ரயில்

மும்பையில் உள்ள அதிகப்படியான போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக மக்கள் பெரும்பாலும் சாலை வழி போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விட, எலக்ட்ரிக் ரயில்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பழக்கமே பெருமளவில் மும்பையில் பின்பற்றப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணிப் பெண்

நிறைமாத கர்ப்பிணிப் பெண்

நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை, அவரின் கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக எலக்ட்ரிக் ரயிலில் அழைத்துச் சென்றிருக்கிறார். ரயிலில் ஏறி வெகு நேரமாகியும் ரயில் புறப்படவில்லை, வெகு நேரமாக நிறைமாத கர்ப்பிணியுடன் அவர் கணவர் ரயிலில் காத்திருந்திருக்கிறார்.

உச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள்! அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ?உச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள்! அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ?

ரயில் ரத்து செய்யப்பட்டது

ரயில் ரத்து செய்யப்பட்டது

காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ரயிலிலேயே பிரசவ வலி துவங்கிவிட்டது. மும்பையில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம்: வேறலெவல் வசதியுடன் களமிறங்கும் கூகுள் மேப்ஸ்.! அடுத்த வாரம்: வேறலெவல் வசதியுடன் களமிறங்கும் கூகுள் மேப்ஸ்.!

ஆட்டோவை நேரடியாக ரயில்வே பிளாட்பாராத்தில் ஓட்டினார்

ஆட்டோவை நேரடியாக ரயில்வே பிளாட்பாராத்தில் ஓட்டினார்

பிரசவ வழியில் துடித்த மனைவியை பார்த்து என்ன செய்வதென்று தெரியாத கணவர், விரைவாக விரைந்து ஸ்டேஷனிற்கு வெளியிலிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விபரத்தை எடுத்துச் சொல்லி உதவி கேட்டிருக்கிறார். எதைப் பற்றியும் யோசிக்காத ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை நேரடியாக ரயில்வே பிளாட்பாராத்தில் ஓட்டி வந்து கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை விரைந்திருக்கிறார்.

உங்கள் குழந்தைகளும் இஸ்ரோவிற்கு செல்ல ஒரு அறிய வாய்ப்பு! இதை உடனே பண்ணுங்க! உங்கள் குழந்தைகளும் இஸ்ரோவிற்கு செல்ல ஒரு அறிய வாய்ப்பு! இதை உடனே பண்ணுங்க!

துணிச்சலான காரியத்திற்கு நெட்டிசன்ஸ்கள் பாராட்டு

துணிச்சலான காரியத்திற்கு நெட்டிசன்ஸ்கள் பாராட்டு

இந்த சம்பவத்தை அங்குள்ள நபர்கள் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. ரயில்வே பிளாட்பாரத்தில் வண்டி ஓட்டிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, உண்மை கரணம் அறிந்தவுடன் சில நிமிடங்களிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த துணிச்சலான காரியத்திற்கு நெட்டிசன்ஸ்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Auto Driver Drives Auto In Mumbai Railway Platform To Rescue Pregnant Lady Video Went Viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X