ஒத்த போனுக்கு மொத்தமும் காலி.. 9020mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 120 FPS கேமிங்.. 7K VC கூலிங்.. எந்த மாடல்?
விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் கலர் வேரியண்ட்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே, சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது, கலர் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.
வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் விற்பனையில் கிடைக்க இருக்கிறது. இதில் வரிசையாக பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, காஸ்மிக் பிளாக் (Cosmic Black) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 1.2 மில்லியன் அன்டுடு ஸ்கோர் கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், பிரத்யேகமாக கேமிங் பீச்சர்களையும் கொடுத்து வருகிறது. 120 FPS கேமிங் அவுட்புட் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், கேம் லோட் ஆப்டிமைசேஷன் அல்கோரிதம் (Game Load Optimization Algorithm), 4டி கேம் வைப்ரேஷன் (4D Game Vibration) கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொடுத்து உள்ளது. ஆகவே, 7K விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஓர்ஜின் ஸ்மூத் என்ஜின் (Origin Smooth Engine) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
9020mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரிக்கு சூப்பர் பேட்டரி சேவர் மோட் (Super Battery Saver Mode), 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் ப்ராமிஸ் (Five-year Battery Health Promise) கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 12.6 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் கிடைக்கும். ரூ.37,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக வெளியான விவோ டி4 ப்ரோ 5ஜி 6500mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. ஆனால், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. IP68 + IP69 ரேட்டிங் கிடைக்கிறது. இதே பீச்சர்களை விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








