இதை எப்படி மிஸ் பண்ணோம்.. OnePlus அறிமுகம் செய்த ஸ்பெஷல் சார்ஜர்.. ரூ.400 டிஸ்கவுண்ட்டில் பலே விற்பனை!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது அதன் ஒன்பிளஸ் நார்ட் 6 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த அதே நாளில் - ஒரு ஸ்பெஷல் சார்ஜரையும் அறிமுகம் செய்தது. எல்லோருடைய கவனமும் ஒன்பிளஸ் நோர்ட் 6 போனின் அறிமுகம் மற்றும் விலையின் மீது மட்டுமே இருந்ததால், இந்த சார்ஜரை பலரும் "மிஸ்" செய்து விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
என்ன சார்ஜர்? ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சூப்பர்வூக் 100W டூயல் போர்ட்ஸ் GaN பவர் அடாப்டர் லைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய சார்ஜர், பல டிவைஸ்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் தேவைப்படும் பயனர்களை இலக்காக கொண்டு, கச்சிதமான வடிவமைப்பில் அதிக அவுட்புட்டை வழங்கும் நோக்கத்தின் கீழ் மூன்றாம் தலைமுறை கேலியம் நைட்ரைடு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

இந்த அடாப்டரில் ஒரு யுஎஸ்பி-ஏ போர்ட் மற்றும் ஒரு டைப்-சி போர்ட் என டூயல்-போர்ட் அமைப்பு உள்ளது. இது சிங்கிள் டிவைஸ் மற்றும் டூயல் டிவைஸ் ஆகிய இரண்டையும் சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது, மேலும் பயன்பாட்டின் அடிப்படையில் டைனமிக் பவர் ஒதுக்கீட்டையும் வழங்குகிறது. ஒரு போர்ட்டை பயன்படுத்தும்போது, இந்த சார்ஜர் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 100W வரையிலும் அல்லது பவர் டெலிவரி மூலம் 65W வரையிலும் ஆற்றலை வழங்க முடியும்.
இரண்டு போர்ட்டுகளும் செயல்படும்போது, இது ஆற்றலை புத்திசாலித்தனமாக பகிர்ந்தளித்து, ஒருங்கிணைந்த அதிகபட்ச வெளியீடாக 100W-ஐ வழங்குகிறது. டூயல்-போர்ட் கான்ஃபிகரேஷன்களை பொறுத்தவரை, இணைக்கப்பட்ட டிவைஸ்ளை பொறுத்து இந்த அடாப்டர் மல்டிபிள் அவுட்புட் ஸ்பிலிட்களை ஆதரிக்கிறது.
இதில் 33W + 33W, 30W + 18W, 67W + 33W, மற்றும் 45W + 18W ஆகிய காம்பினேஷன்கள் அடங்கும். தொழில்நுட்ப மட்டத்தில், சிங்கிள்-போர்ட் அவுட்புட்டிற்கு இது 11V-இல் அதிகபட்சம் 6.1A அல்லது 11V-இல் அதிகபட்சம் 9.1A-ஐ ஆதரிக்கிறது.
இந்த சார்ஜர் பரந்த அளவிலான சார்ஜிங் தரநிலைகளை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் சூப்பர்வூக் (SUPERVOOC), பவர் டெலிவரி 3.0 (Power Delivery 3.0), பிபிஎஸ் (PPS), குயிக் சார்ஜ் (Quick Charge) மற்றும் யுஎஃப்சிஎஸ் (UFCS) ஆகியவை அடங்கும். இது பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்களுடன் இணக்கத்தன்மையை உறுதி செய்கிறது.
ஹார்ட்வேர் பக்கம் பார்த்தால், இந்த அடாப்டரின் வெளிஅவுட்டர் ஷெல்லிற்கு பாலிகார்பனேட் பொருள் பயன்படுத்தப்படுகிறது. பின்கள் உட்பட இதன் உயரம் 55 x 30.5 x 70 மிமீ ஆகும், மற்றும் இதன் எடை தோராயமாக 150 கிராம் ஆகும். GaN தொழில்நுட்பத்தால் இதன் கச்சிதமான அளவு சாத்தியமாகிறது, இது வெப்ப திறனைப் பராமரிக்கும் அதே வேளையில், இன்டர்னல் காம்போனென்ட்களை இறுக்கமாக பொருத்த அனுமதிக்கிறது.
இந்த சார்ஜர் 100 முதல் 240V வரையிலான இன்புட் வரம்பிற்கு 50 அல்லது 60Hz மற்றும் 2.1A ஆதரவுடன் மதிப்பிடப்பட்டுள்ளது, இது சர்வதேச பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த அடாப்டர் 90% வரை கன்வெர்ஷன் எபிஷியன்ஸியை அடைவதாகவும், இது செயல்பாட்டின் போது ஏற்படும் ஆற்றல் இழப்பு மற்றும் வெப்ப உருவாக்கத்தை குறைக்க உதவுவதாகவும் ஒன்பிளஸ் கூறுகிறது.
விலை மற்றும் விற்பனை: ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சூப்பர்வூக் 100W டூயல் போர்ட்ஸ் GaN பவர் அடாப்டர் லைட் ஆனது ஒயிட் கலர் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதன் விலை ரூ.3,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அறிமுக சலுகை விலையாக ரூ.3,199 க்கு வாங்ககிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த சார்ஜரை, ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








