குழந்தைகளுக்கான 10 சிறந்த கல்வி சார்ந்த யூடியூப் சேனல்கள்

|

புதிய காரியங்களைக் கற்று கொள்ள யூடியூப், ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. ஒரு கருத்தை காட்சி வடிவத்தில் விளக்கப்படும் போது, குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். இந்த வகையில், யூடியூப்பில் எண்ணற்ற கல்வி சார்ந்த தளங்கள் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், குழந்தைகளுக்கான 10 சிறந்த கல்வி சார்ந்த யூடியூப் சேனல்களை அளிக்கிறோம்.

மினிட்பிஸிக்ஸ்

மினிட்பிஸிக்ஸ்

ஒரு சில நிமிடங்களில் ஒரு கருத்தை உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கான ஒரு சிறந்த பொக்கிஷமாக மினிட்பிஸிக்ஸ் தளம் அமையும் எனலாம். இந்த யூடியூப் சேனல், ஒரு நிமிடத்தில் இயற்பியல் கருத்தை எளிதில் விளக்கி விடுகிறது. மேலும் இந்த தளம், அறிவியலை வேடிக்கை மிகுந்ததாகவும் தொடர்புடையதாகவும் மாற்றுகிறது.

கீக் குருல் டையரிஸ்

கீக் குருல் டையரிஸ்

கணினி அறிவியலில் எதிர்காலத்தை அமைக்க விரும்பும் சிறுமியருக்காக, இந்த சேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் சாஃப்ட்வேர் என்ஜினியர்களின் நேர்காணல்கள் நிரம்பி காணப்படுவதோடு, கவர்ச்சிகரமான முறையில் பிரோகிராமிங் கற்று தரப்படுகிறது. ஒரு கம்ப்யூட்டரை எப்படி கட்டமைப்பது என்பதை கூட இதில் சிறப்பாக விளக்கப்படுகிறது.

சோல்பேன்கேக்

சோல்பேன்கேக்

உங்கள் குழந்தைகளை சிந்திக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த சேனலில் கட்டாயம் சந்தாதாரராக சேர வேண்டும். இந்த சேனலில் வரும் வீடியோக்கள், வேறுபட்ட வயதில் உள்ள குழந்தைகள் குழுக்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டவை. உங்கள் குழந்தையை சிந்திக்க வைத்து, ஒழுக்கமான நெறிமுறைகளில் செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்டவை.

வேரிடாசியம்

வேரிடாசியம்

இது அறிவியலை கையாளும் வல்லுநர்களின் நேர்காணல்கள் மற்றும் சிறப்பான செயல்விளக்கங்களை உள்ளடக்கிய ஒரு வீடியோ ப்ளாக் ஆகும். இது படிப்பினையை முற்றிலும் ஒரு புதிய நிலைக்கு அழைத்து செல்வதோடு, எல்லாவற்றையும் செயல்முறையோடு விளக்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு ஓரியோ ஃபோனில் ஒரே அப்ளிகேஷனை ஸ்பிலிட் திரையில் இயக்கும் முறைஆன்ட்ராய்டு ஓரியோ ஃபோனில் ஒரே அப்ளிகேஷனை ஸ்பிலிட் திரையில் இயக்கும் முறை

த ஸ்பேங்லர் எஃப்பெக்ட்

த ஸ்பேங்லர் எஃப்பெக்ட்

இந்த சேனலை ஒரு பொறுமையான ஆசிரியை நடத்துகிறார். சாதாரண அறிவியல் சோதனைகளை கூட மறக்க முடியாத ஒரு காரியமாக மாற்ற வேண்டும் என்பதை மையமாக கொண்டே இந்த சேனல் செயல்படுகிறது. இதில் நடத்தப்படும் சோதனைகளில் இருந்து என்ன காரியத்தை எதிர்பார்க்கலாம் என்பதை உங்கள் குழந்தைக்கு தெரியாது என்பதால், இந்த சேனல் மூலம் கற்கும் அனுபவம் குதூகலம் கொண்டதாக இருக்கும். எனவே இதில் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனைகள் அனைத்தும், ஸ்பேங்லர் தாக்கம் கொண்டதாக இருக்கும் என்று வர்ணிக்கப்படுகிறது.

மேக் மீ ஜீனியஸ்

மேக் மீ ஜீனியஸ்

இளம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது என்பதோடு, இந்த சேனலில் வரும் வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பதற்கு எளிதாக உள்ளன. பொம்மை படங்கள் மற்றும் கதைகளின் மூலம் காரியங்கள் விளக்கப்படுவதால், குழந்தைகள் எளிதாக கருத்துக்களை ஒப்பிட்டு பார்த்து, மகிழ்ச்சியோடு கற்றுக் கொள்கிறார்கள். மேலும், உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான கலாச்சாரங்களை குறித்து அறிந்து கொள்கிறது. இந்த சேனலில் வரும் வீடியோக்களில் பல்வேறு விதமான பேச்சுவழக்குகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுஸ்டன் ஸூ

ஹவுஸ்டன் ஸூ

உங்கள் குழந்தைக்கு விலங்குகளைப் பிடிக்குமா? ஆம் என்றால், ஹவுஸ்டன் ஸூ சேனலை உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பும். இந்த யூடியூப் சேனலில், எல்லா விதமான கல்வி சார்ந்த மற்றும் விலங்குகள் தொடர்பான கதைகள் காணப்படுகின்றன.

How to check PF Balance in online (TAMIL)
ரீடிங் ரெயின்போ

ரீடிங் ரெயின்போ

மிகவும் பிரபலமான யூடியூப் சேனல்களில் இது ஒன்றாக திகழ்கிறது. லிவர் பூர்டன் மூலம் நடத்தப்படும் இந்த சேனலில் கதைகள், தொழிற்நுட்ப வீடியோக்கள், கள பயண வீடியோக்கள் மற்றும் குழந்தைகளால் அளிக்கப்பட்ட புத்தக மதிப்புரைகள் ஆகியவை காணப்படுகின்றன. எனவே மூத்த மற்றும் இளம் வயது குழந்தைகள், இந்த சேனலை கண்டு மகிழலாம்.

கான் அகடமி

கான் அகடமி

கல்வி சார்ந்த காரியங்களை ஆன்லைனில் கற்று கொள்ள உதவும் யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் குழந்தை பள்ளியில் படிக்கும் எந்தொரு பாடமாக இருந்தாலும், அதை கான் அகடமியில் காண முடியும். உங்கள் குழந்தையின் மனதில் கருத்தை ஆழமாக பதிய வைக்க, இது ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது.

கிரஸ் கோர்ஸ் கிட்ஸ்

கிரஸ் கோர்ஸ் கிட்ஸ்

இந்த சேனலில் வாரத்திற்கு இரு முறை வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில் தரமான பள்ளியில் புகட்டும் அறிவியல் பாடத்தை குறித்து அவர்கள் பேசுகிறார்கள். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேனல், தற்போதைக்கு ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான உள்ளடக்கங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறது. பின்வரும் பாடங்களைக் குறித்து இதில் விளக்கப்படுகின்றன: புவி அறிவியல், உயிரியல், இயற்பு அறிவியல், புவியியல் மற்றும் வானியல்.

Best Mobiles in India

Read more about:
English summary
YouTube is an excellent source to learn new things and thus the platform can be used to help kids learn new things as well. Besides, there are a lot of Kids channels to consumer content.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X