தலைவன் பின்றானே.. AMOLED டிஸ்பிளே.. 365mAh பேட்டரி.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, 365mAh பேட்டரி, 5ஏடிஎம் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், பயோடிராக்கர் 6.0 பிபிஜி பயோமெட்ரிக் சென்சாருடன் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் (Amazfit Active 3 Premium) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. ஜிபிஎஸ், ஜெப் ப்ளோவ் ஏஐ அசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்களை கொண்ட இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் மாடலின் விவரங்களை பார்க்கலாம்.
அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகி பிறகு இந்திய மார்கெட்டில் வெளியாகும். இப்போது குளோபல் மார்கெட்டில் இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யுஎஸ் மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் அம்சங்கள் (Amazfit Active 3 Premium Specifications): 1.32 (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (anti-fingerprint Coating) மற்றும் சப்பயர் கிளாஸ் (Sapphire Glass) புரொடெக்சன் கொடுத்துள்ளது.
ஜெப் ஓஎஸ் 5 (Zepp OS 5) மற்றும் ஜெப் ப்ளோ ஏஐ வாய்ஸ் கன்ட்ரோல் (Zepp Flow AI Voice Control) கிடைத்துள்ளது. ப்ளூடூத் 5.3 எல்இ (Bluetooth 5.3 LE) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. ப்ளூடூத் வாய்ஸ் காலிங் (Bluetooth Voice Calling) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரை இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் கொடுத்துள்ளது.
பயோடிராக்கர் 6.0 பிபிஜி பயோமெட்ரிக் சென்சார் (BioTracker 6.0 PPG Biometric Sensor) சென்சார் கிடைக்கிறது. ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), 3-ஆக்சிஸ் மோஷன் சென்சார் (3 Axis Motion Sensor) மற்றும் பரோமீட்டர் (Barometer) கிடைக்கிறது. மேலும், ஆம்பியன்ட் லைட் (Ambient Light), ஸ்கின் டெம்ப்ரேச்சர் சென்சார் (Skin Temperature Sensor) கிடைத்துள்ளது.
ஜிபிஎஸ் (GPS) மட்டுமல்லாமல், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) கொடுக்கப்பட்டு உள்ளது. 170+ வொர்க் அவுட் மோட்களை இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் கொடுத்துள்ளது. ஜெப் கோச் (Zepp Coach) கிடைக்கிறது. இதுவொரு ஏஐ அசிஸ்டன்ட் கொடுக்கும் கோச்சாக இருக்கிறது.
24 மணி நேர ஹார்ட் ரேட் (Heart Rate) மானிட்டரிங் மற்றும் எஸ்பிஓ2 மானிட்டரிங் கிடைக்கிறது. மேலும், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) கொடுக்கப்பட்டு உள்ளது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. 365mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 12 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும் ஜிபிஎஸ் பயன்படுத்தினால், 24 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ஏபெக்ஸ் சில்வர் (Apex Silver), அட்லஸ் ப்ளூ (Atlas Blue) மற்றும் ஏரியோ ஒயிட் (Aero White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. யுஎஸ் மார்கெட்டில் 169.99 அமெரிக்க டாலர்களாக விலை இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.15,465ஆக இருக்கிறது. இந்தியாவில் ஓரிரு வாரங்கள் இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 3 பிரீமியம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் ரூ.10,000 மேல் பட்ஜெட் இருக்கும்.


Click it and Unblock the Notifications