ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!

|

NASA ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சமீபத்தில் 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள மூலக்கூறு மேகத்தை உற்று ஆராய்ந்திருக்கிறது. இதன்மூலம் இந்த மேகத்திற்குள் பல்வேறு தனிமங்களால் ஆன பனிக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ளிர்ந்த மற்றும் இருண்ட பகுதி

ளிர்ந்த மற்றும் இருண்ட பகுதி

இதுகுறித்து வெளியான ஒரு செய்திக் குறிப்பில், Chameleon 1 என்ற மேகத்தில் மீத்தேன், சல்பர், நைட்ரோஜன் மற்றும் எத்தனால் ஆகியவை அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மேகத்தை உன்னிப்பாக ஆராய்ந்ததில், இதுவரை காணப்பட்ட குளிர்ந்த மற்றும் இருண்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுதவாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியமா?

மூலக்கூறு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியமா?

இன்ஸ்டாகிராம் இல் நாசா, இதுவரை பார்த்திராத பனி மேகத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதனுடன் சில தகவலையும் நாசா வெளியிட்டுள்ளது. அதில், இந்த மூலக்கூறு மேகம் மிகவும் குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேகத்தில் நீர் மட்டுமில்லாமல் தூசியின் தானியங்கள் உறைந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒரு நட்சத்திரம் பிறப்பதற்கு முன் அது மூலக்கூறு மேகங்களாக இருக்கும் போது அதற்குள் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

நட்சத்திரம் உருவாக காரணம் இதுதான்

நட்சத்திரம் உருவாக காரணம் இதுதான்

முதலில் மூலக்கூறு மேகங்கள் (Molecular clouds) என்றால் என்ன என பார்க்கலாம். மூலக்கூறு மேகங்கள் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயுக்களை உருவாக்கக்கூடிய தன்மை கொண்டது.

தூசிகள் நிறைந்த விண்மீன் குழுக்கள் என்றும் நட்சத்திரங்களின் பிறப்பிடம் என்றும் இதை குறிப்பிடலாம்.

நட்சத்திரங்கள் பிறப்பதற்கு மூலமாக இருப்பது இதுபோன்ற மேகங்கள் தான். இந்த மேகங்களுக்குள் இருந்து அடர்த்தியான பகுதிகள் சரிந்த விழும் போது புரோட்டோஸ்டார் எனப்படும் இளம் நட்சத்திரங்கள் உருவாகின்றன.

உண்மையை கட்டவிழ்த்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

உண்மையை கட்டவிழ்த்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பனிக்கட்டிகள் நிறைந்த இந்த மூலக்கூறு மேகத்தை ஆய்வு செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு, நீர் பனி உடன் மேகத்தின் உள்ளே அமோனியா, மெத்தனால், மீத்தேன் மற்றும் கார்போனைல் சல்பைட் ஆகியவை உறைந்த வடிவங்களாக இருந்ததை அடையாளம் கண்டுள்ளனர்.

ஒரு மூலக்கூறு மேகத்துக்குள் இத்தனை ரகசியங்கள் இருப்பது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

நட்சத்திரம் எப்படி உருவாகிறது?

நட்சத்திரம் எப்படி உருவாகிறது?

ஒரு நட்சத்திரம் நட்சத்திரமாக மாறுவதற்கு அதன் சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஏற்படும் அழுத்தமே காரணம் ஆக இருக்கும். பால்வெளி மண்டலத்தில் சுமார் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாட் கோர்ஸ் இல் ஹைட்ரோஜன் இணைவு நடைபெறும் போது நட்சத்திரம் உருவாகத் தொடங்குகிறது.

கருந்துளையாக மாறும் நட்சத்திரம்

கருந்துளையாக மாறும் நட்சத்திரம்

பால்வெளி மண்டலத்தில் இருக்கும் தூசிக்களும் வாயுக்களும் இணைந்து மேகங்கள் போன்ற அமைப்பை உருவாக்கிறது. அது மேலே குறிப்பிட்டுள்ள மூலக்கூறு மேகங்கள் ஆகும். இந்த உருவாக்கமானது நேப்யுலா என அழைக்கப்படுகிறது.

நேப்யுலாவில் ஏற்படும் ஈர்ப்பு விசைக் காரணமாக இது சுருங்கி விரிகிறது. இதற்குள் ஏற்படும் செயல்பாடுகள் மூலமாகவே நட்சத்திரம் உருவாகிறது. நட்சத்திரத்துக்கு பிறப்பு இருப்பது போல் இறப்பும் இருக்கிறது.

நட்சத்திரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அணுக்கல் குறையும் போது அதன் ஈர்ப்பு விசை குறையும் இதனால் அதன் சுருங்கும் தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டு நட்சத்திரம் கருந்துளையாக மாறிவிடுகிறது.

நட்சத்திரம் இறப்பு எப்படி நிகழும்?

நட்சத்திரம் இறப்பு எப்படி நிகழும்?

நட்சத்திரம் மின்னுவது போல் தெரிகிறது அல்லவா அதற்கு இதுவும் காரணம் என கூறப்படுகிறது. ஒரு விதை மண்ணை பிளந்து வெளியே வந்தால் தான் அது செடியாகவும் மரமாகவும் வளரும். அதேபோல் தான் நட்சத்திரமும். நட்சத்திரம் விரிந்துக் கொண்டே இருக்கும், அப்போது அதற்குள் ஏற்படும் ஈர்ப்பு விசை ஆனது அதை உள்ளே இழுத்து சுருக்கிக் கொள்ளும். தொடர்து விரிந்து சுருங்கிக் கொண்டே இருக்கும். அதன் ஈர்ப்பு விசை குறையும் போது அது விரிந்து வெடித்துவிடும்.

ஜேம்ஸ் வெப்

ஜேம்ஸ் வெப்

பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. தற்போது இந்த தொலைநோக்கி மூலம் பல்வேறு விண்வெளி ரகசியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. முன்னதாக விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட ஜேம்ஸ் வெப் 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

Courtesy: NASA

Best Mobiles in India

English summary
Secrets of Molecular Cloud Before Stars Born: NASA James Webb Telescope Reveal, Scientists Amazed.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X