பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!

|

விண்வெளியில் இருக்கும் கிரகங்கள், கோள்கள், கேலக்ஸி (Galaxy), வேற்று பிரபஞ்சங்களில் ஏதேனும் உயிர் உள்ள கிரகம் இருக்கிறதா? என்பதைத் தெரிந்துக்கொள்வதற்குப் பல ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் பிரபஞ்சத்தின் பல்வேறு ரகசியங்கள் தொடர்ந்து கட்டவிழ்க்கப்பட்டு வருகிறது என்றே நாம் கூறலாம். அந்த வகையில் இந்தியா மற்றும் கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பூமியிலிருந்து சுமார் 9 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு வேற்று கேலக்ஸியிலிருந்து வந்த ரேடியோ அலைவரிசையைக் கண்டறிந்துள்ளனர்.

பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.!

வேற்று பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.!

பொதுவாகத் தொலைதூரத்தில் இருக்கும் கேலக்ஸி அல்லது கிரகங்களிலிருந்து வெளியிடப்படும் ரேடியோ சிக்னலை பூமியில் கண்டறிவது கடினம். வெகுதூரம் பயணம் செய்யும் போது அந்த ரேடியோ சிக்னல் மெல்ல-மெல்ல அழிந்துவிடும். பூமியில் உள்ள ரிசிவரை (Receiver) இது அடையும் பொழுது, மிகவும் கணிசமான அளவு தகவலை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும். இவற்றை டிடெக்ட் (Detect) செய்வது மிகவும் கடினமான ஒன்று.

ஆனால், இந்த ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த தொலைவிலிருந்து வந்த ரேடியோ சிக்னலை டிடெக்ட் செய்துள்ளனர். இத்தகைய சிக்னலை எப்படி அவர்கள் கண்டறிந்தனர் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு 'ரெக்கார்ட் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் (Record Breaking Distance)' நிகழ்வு என்று கூறப்படுகிறது.

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) போஸ்ட் டாக்டரால் ஆராய்ச்சி (Post-Doctoral Research) செய்யும் அர்னப் சக்கரவர்த்தி என்பவரும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (Indian Institute of Science) என்ற கல்வி நிறுவனத்தில் இயற்பியல் பேராசிரியராக இருக்கும் நிருபம் ராய் என்பவரும் இணைந்து இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.!

எது.! பூமி உருவாகும் முன் தோன்றிய வேற்று பிரபஞ்சத்தின் ரேடியோ சிக்னலா இது?

இதில் தொலைதூரத்தில் உள்ள SDSSJ0826+5630 என்ற கேலக்ஸியிலிருந்து வெளியிடப்பட்ட ஹைட்ரஜன் லைன் (Hydrogen Line) என்று கூறப்படும் ஒரு குறிப்பிட்ட ரேடியோ சிக்னலாகும். இந்த சிக்னலின் வேவ் லென்த் (Wavelength) சுமார் 21 செ.மீ. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி, சுமார் 4.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதாவது, இது நம் சூரிய குடும்பத்தை விடப் பழமையான ஒரு கேலக்ஸி ஆகும்.

நம் சூரிய குடும்பம் உருவாகி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேலக்ஸியிலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னலை கிராவிடேஷனல் லென்சிங் (Gravitational Lensing) என்ற முறை மூலம் இந்திய விஞ்ஞானிகள் டிடெக்ட் செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள ஜெயிண்ட் மீட்டர் வேவ் ரேடியோ டெலஸ்கோப் (Giant Metrewave Radio Telescope) மூலம், இந்த ரேடியோ சிக்னல் கவரப்பட்டுள்ளது.

கிராவிடேஷனல் லென்சிங் என்பது மிகவும் கணிசமாக இருக்கும் சிக்னலை பெரிதுபடுத்தி அனுப்பும் ஒரு செயல்பாடாகும். இது மிகவும் தொலைதூரத்தில் இருந்து வெளியிடப்படும் சிக்னல்களை கண்டறிய மிகவும் உதவிக்கரமாக இருக்கும். இந்த ஆய்வறிக்கையைப் பொருத்தவரை, சுமார் 9 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கேலக்ஸியிலிருந்து வெளியிடப்பட்ட ரேடியோ சிக்னல் பூமியை நோக்கி வரும்பொழுது மற்றொரு பிரம்மாண்டமான உருவத்தின் மூலம் பெரிது படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.!

'அந்த' பிரபஞ்சத்திற்கும் 'இந்த' பிரபஞ்சத்திற்கும் 'இடையில்' ஒரு பிரபஞ்சமா? வியப்பில் விஞ்ஞானிகள்.!

அதாவது இந்த ரேடியோ சிக்னலை வெளியிட்ட அந்த கேலக்ஸிக்கும், இந்த சிக்னலை கண்டறிந்த பூமிக்கும் இடையில் மற்றொரு கேலக்ஸி இருந்து அது கிராவிட்டேஷனல் லென்சிங்-கிற்கு உதவி செய்து இருக்கலாம் என்று இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிராவிட்டேஷனல் லென்சிங் மூலம் SDSSJ0826+5630 கேலக்ஸியிலிருந்து வெளிவந்த ரேடியோ சிக்னல் சுமார் 30 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தான் அந்த ரேடியோ சிக்னல் டெலஸ்கோப்பால் கண்டறிய முடிந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர். இது 'ரெக்கார்ட் பிரேக்கிங் டிஸ்டன்ஸ்' என்ற கணிக்க முடியாத இடத்தில் இருந்து வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரேடியோ சிக்னல் பின்னணியில் என்ன ரகசியங்கள் இருக்கிறது என்பதை, அடுத்தகட்ட ஆராய்ச்சி மூலம் அறியப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Scientists Of Indian And Canadian Captures Radio Signal From The Most Distant Galaxy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X