ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA), 95% பூமியை போலவே இருக்கும் ஒரு புதிய கிரகத்தை (Earth-like Planet) கண்டுபிடித்துள்ளது.

நாசாவின் இந்த கண்டுபிடிப்பு, ஏலியன்ஸ் (Aliens) என்று அழைக்கப்படும் வேற்றுகிரக உயிரினங்களை நாம் நெருங்கிவிட்டோமா என்கிற கேள்விக்கான பதிலாக அமையுமா? அல்லது இது முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பா? இதோ விவரங்கள்:

உருவத்தில்

உருவத்தில் "இன்னொரு" பூமி!

நாசாவை (NASA) சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியை போலவே இருக்கும் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த புதிய கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் (Liquid Water) இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றன.

அதாவது, உருவத்தில் "இன்னொரு" பூமியை போலவே இருக்கும் இந்த கிரகமானது உயிர்கள் வாழத்தகுந்த ஒரு கிரகமாக இருக்கலாம் என்று அர்த்தம்!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

அப்போது அங்கே உயிர்கள் இருக்கின்றதா?

அப்போது அங்கே உயிர்கள் இருக்கின்றதா?

நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே செயற்கைக்கோளை (Transiting Exoplanet Survey Satellite - TESS) பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகத்திற்கு டிஓஐ 700 இ (TOI 700 e) என்று பெயரிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த கிரகம், நமது பூமியின் அளவுடன் 95% ஒற்றுப்போகிறது மற்றும் பாறைகளால் நிறைந்துள்ளது போல் தெரிகிறது.

இந்த காரணங்களை வைத்து மட்டுமே அங்கே உயிர்கள் வாழ்கிறது என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது. தற்போதைக்கு இது ஒரு எக்ஸோபிளானெட் (Exoplanet) மட்டுமே ஆகும்!

எக்ஸோபிளான்ட் என்றால் என்ன?

எக்ஸோபிளான்ட் என்றால் என்ன?

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ளஎந்தவொரு கிரகமும் - எக்ஸோபிளானெட் (Exoplanet) அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானெட் (Extrasolar Planet) என்று அழைக்கப்படுகின்றன.

இப்படியான எக்ஸோபிளானெட் கண்டுபிடிக்கப்படுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. எக்ஸோபிளானெட் குறித்த முதல் சாத்தியமான ஆதாரம் 1917 ஆம் ஆண்டிலேயே கிடைத்தது.

ஆனால் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தினால் அது அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அந்த நிலைமை தலைகீழாய் மாறி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வீசப்படும் ட்யூப்கள்.. அதற்குள் என்ன இருக்கிறது? NASA-வின் செவ்வாய் கிரகத்தில் வீசப்படும் ட்யூப்கள்.. அதற்குள் என்ன இருக்கிறது? NASA-வின் "அடேங்கப்பா" பிளான்!

ஒன்றல்ல.. இரண்டல்ல. மொத்தம் 285!

ஒன்றல்ல.. இரண்டல்ல. மொத்தம் 285!

டிஇஎஸ்எஸ் (TESS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே செயற்கைகோள் ஆனது கடந்த ஏப்ரல் 2018-இல் விண்ணில் ஏவப்பட்டது.

அப்போதிருந்து, இந்த செயற்கைகோள் மொத்தம் 285 உறுதிப்படுத்தப்பட்ட எக்ஸோப்ளானெட்டுகளையும், எக்ஸோப்ளானெட்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் 6,000 க்கும் கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது!

இன்னொரு திகைப்பூட்டும் விஷயம்!

இன்னொரு திகைப்பூட்டும் விஷயம்!

பூமியை போலவே இருக்கும் டிஓஐ 700 இ என்கிற கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட மறுகையில், பூமியில் இருந்து சுமார் 15,00,000 கிலோமீட்டர் தொலைவில் ஓராண்டுக்கும் மேலாக செலவழித்த பின்னர் நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப்பும் கூட முதன் முதலாக ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது!

இதில் திகைப்பூட்டும் விஷயம் என்னவென்றால், எல்எச்எஸ் 457 பி (LHS 475 b) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த கிரகமும் கூட 99% சதவீத பூமியை போலவே உள்ளது. அதாவது இதன் விட்டம், நாம் வாழும் பூமியுடன் 99% ஒற்றுப்போகிறது!

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

41 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது!

41 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது!

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் வழியாக கண்டுபிடிக்கப்பட்ட எல்எச்எஸ் 475 பி (LHS 475 b) என்கிற கிரகமானது, இது ஆக்டான்ஸ் விண்மீன் உடன் ஒப்பீட்டளவில் நெருக்கமாக உள்ளது!

இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இது பூமியிலிருந்து சுமார் 41 ஒளி ஆண்டுகள் என்கிற தொலைவில் உள்ளது. அறியாதோருக்கு 1 ஒளியாண்டு என்றால் 9.46 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்!

Photo Courtesy: NASA/JPL-Caltech/Robert Hurt

Best Mobiles in India

English summary
Scientists from NASA found Earth like Alien planet with potential Liquid Water Using TESS Satellite

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X