செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!

|

செவ்வாய் (Mars) கிரகத்தை ஒரு கிரகம் என்று நினைக்கும் போதெல்லாம், பெரும்பாலான மக்களின் மனதில் தோன்றும் ஒரு காட்சி என்றால், அது அங்கு பறந்து விரிந்திருக்கும் சிவப்பு நிற பாழடைந்த நிலப்பரப்பு தான்.. இதனால் தான், இந்த கிரகத்தை நாம் சிவப்பு கிரகம் அல்லது ரெட் பிளானட் (Red planet) என்று அழைக்கிறோம். இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும், செவ்வாய் கிரகத்தில் பனிக் காலம் எப்படி இருக்கும் என்று நாசா (NASA) புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.

செவ்வாயில் பனி காலமா? பனிபொழிவு நிகழ்ந்ததா?

செவ்வாயில் பனி காலமா? பனிபொழிவு நிகழ்ந்ததா?

இந்த சிவப்பு கிரகம் பனி காலத்தில் (winter on Mars) எப்படி அதன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? பூமியில் (Earth) பனிக்காலம் எப்படி இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால், பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய்க் கிரகத்தில், பனி காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கும் புகைப்படங்களை நாசா இப்போது பகிர்ந்துள்ளது.

உண்மையிலேயே, பனி காலத்தில் இந்த சிவப்பு கிரகம் நம்மை மிகவும் பிரமிக்க வைக்கிறது.!

செவ்வாய் குளிர்காலம் எத்தகையது?

செவ்வாய் குளிர்காலம் எத்தகையது?

பெர்ஸெவேரன்ஸ் ரோவர் (Perseverance Rover) மற்றும் இங்கேனுனிட்டி ஹெலிகாப்டர் (Ingenuity) ஹெலிகாப்டர் ஆகியவை சிவப்பு கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தை ஆய்வு செய்கின்றன - இந்த குறிப்பிட்ட பகுதி செவ்வாய் கிரகத்தின் குளிர்காலத்தில் இருக்கிறது.

இந்த கிரகத்தின் வானிலை தூசியால் இயக்கப்படுகிறது. உண்மையில், தூசி ஒரு தூதராக செயல்படுகிறது. இது குளிர்காலத்தின் வருகையைக் குறிக்கிறது.

நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது தெரியுமா?நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது தெரியுமா?

பூமியை விட காட்டு தனமான குளிர்.! மைனஸ் எத்தனை டிகிரி தெரியுமா?

பூமியை விட காட்டு தனமான குளிர்.! மைனஸ் எத்தனை டிகிரி தெரியுமா?

இதனால், இப்போது செவ்வாய் கிரகத்தில் தூசி எல்லாம் இல்லை, பனி மற்றும் உறைபனியாக நிரம்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இரண்டு வகையான பனி காணப்படுகிறது - இதில் ஒன்று, உறைந்த நீரிலிருந்து உருவாகும் பனியாகும்.

இது பூமியில் காணப்படும் பனியைப் போன்றது.

மெல்லிய செவ்வாய்க் காற்று மற்றும் சப்ஜீரோ வெப்பநிலையிலிருந்து மைனஸ் -123 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

செவ்வாயில் 2 வகையான பனியா? இதில் ஒன்று பூமி போன்ற நீர் பனிக்கட்டியா?

செவ்வாயில் 2 வகையான பனியா? இதில் ஒன்று பூமி போன்ற நீர் பனிக்கட்டியா?

இரண்டாம் வகையான பனி கார்பன் டை ஆக்சைடு (carbon di-oxide) அடிப்படையிலானது - இதைப் பூமியில் நாம் உலர் பனி அல்லது ட்ரை ஐஸ் (dry ice) என்று குறிப்பிடுகிறோம். இது மேற்பரப்பில் தரையிறங்கி அப்படியே நிலைத்து நிற்கக்கூடியது.

உண்மையில், துருவங்களுக்கு அருகிலுள்ள சமதளப் பகுதிகளில் சில அடி உயரம் வரை பனியைக் (snow) காண முடிவதாக நாசா தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா.! OnePlus பலே கில்லாடி போலயே.! 2020ல வாங்குன போன்ல கூட 5G கிடைக்குதா?அடேங்கப்பா.! OnePlus பலே கில்லாடி போலயே.! 2020ல வாங்குன போன்ல கூட 5G கிடைக்குதா?

நாசாவுக்கே ஆச்சரியம் என்ன தெரியுமா?

நாசாவுக்கே ஆச்சரியம் என்ன தெரியுமா?

இதில் ஆச்சரியம் என்னவென்றால், சிவப்பு கிரகத்தில் பனிப்பொழிவை (snow on Mars) இதுவரை எந்த ஆர்பிட்டர்களும் அல்லது ரோவர்களும் காணவில்லை.

ஏனெனில் பனிப்பொழிவு இரவில் மேக மூட்டத்தின் கீழ் துருவங்களில் மட்டுமே நிகழ்கிறது மற்றும் ஆர்பிட்டர் கேமராக்கள் அதைக் காண முடியாது.

உறைபனி வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட ரோவர்களோ அல்லது எக்ஸ்ப்ளோரர்களோ இல்லாததால், தரையில் ஆய்வும் சாத்தியமில்லை.

செவ்வாய் துருவங்களில் CO2 பனி உண்மை தானா?

செவ்வாய் துருவங்களில் CO2 பனி உண்மை தானா?

இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் கண்காணிப்பு ஆர்பிட்டரில் உள்ள செவ்வாய் கிரக காலநிலை ஒலி கருவி மனித கண்ணுக்குத் தெரியாத ஒளியைக் கண்டறியக் கூடியது.

இதன் மூலம், செவ்வாய் துருவங்களில் CO2 பனி விழுவதை இது கண்டறிந்துள்ளது.

கடந்த 2008 இல் செவ்வாய் கிரகத்திற்கு வந்த ஃபீனிக்ஸ் லேண்டரில் லேசர் கருவிகள் உள்ளன - அவை செவ்வாய் கிரகத்தின் வட துருவத்திலிருந்து 1,609 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இருந்து நீர்-பனியைக் கண்டறிந்துள்ளன.

இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!

செவ்வாய் ஸ்னோஃப்ளேக்ஸ் சதுர வடிவில் தான் இருக்குமா?

செவ்வாய் ஸ்னோஃப்ளேக்ஸ் சதுர வடிவில் தான் இருக்குமா?

பூமியில் உள்ள பனித்துளிகள் போலல்லாமல், செவ்வாய் ஸ்னோஃப்ளேக்ஸ் கனசதுர வடிவில் இருக்கும் என்றும் நாசா அறிக்கை எடுத்துரைத்துள்ளது.

ஸ்னோஃப்ளேக்ஸ் (Mars snowflakes) உண்மையில் மனித முடியின் அகலத்தை விட சிறியதாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. பனி மற்றும் கார்பன் டை ஆக்சைடு அடிப்படையிலான உறைபனிகள் செவ்வாய் கிரகத்தில் உருவாகின்றன.

இவை துருவங்களிலிருந்து வெகு தொலைவில் கூட உருவாகிறது.

பனி பொழிவால் செவ்வாய் கிரகத்தில் தோன்றும் விசித்திர உருவங்கள்.!

பனி பொழிவால் செவ்வாய் கிரகத்தில் தோன்றும் விசித்திர உருவங்கள்.!

கடந்த 2001 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு வந்த ஒடிஸி ஆர்பிட்டர் உண்மையில் உறைபனி உருவாவதையும் சூரிய ஒளியில் வாயுவாக மாறுவதையும் கண்டது.

மறுபுறம் வைக்கிங் லேண்டர்கள் 1970-களில் முதன்முதலில் வந்தபோது செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி உறைபனியைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2023 கோவிட் அச்சம்: வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஹெல்த் கேட்ஜெட்ஸ்.! தவற விட்டுவிடாதீர்கள்.!2023 கோவிட் அச்சம்: வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஹெல்த் கேட்ஜெட்ஸ்.! தவற விட்டுவிடாதீர்கள்.!

குளிர்காலம் முடிவடையும் போது, ​​அனைத்து பனிக்கட்டிகளும் கரைந்து வாயுவாக மாறி, சுவிஸ் சீஸ், டால்மேஷியன் புள்ளிகள், முட்டைகள் போன்ற தனித்துவமான வடிவங்களை உருவாக்குகின்றன என்று நாசா கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Released Pictures Show How Winter On Mars Looks Like

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X