45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல.. NASA செய்யும் விபரீதமான காரியம்!

|

வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைய வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) புதிய முயற்சி ஒன்றை செய்து வருகிறது.

அதை "புதிய முயற்சி" என்று கூறுவதை விட ஒரு "விபரீதமான காரியம்" என்றே கூறலாம்! அதென்ன முயற்சி? அதிலுள்ள விபரீதம் என்ன? உண்மையிலேயே செவ்வாய் கிரகத்தை வெறும் 45 நாட்களுக்குள் சென்றடையலாமா? இது எப்படி சாத்தியம்? இதோ விவரங்கள்:

எலான் மஸ்க் ஆரம்பிச்ச வேலை!

எலான் மஸ்க் ஆரம்பிச்ச வேலை!

சில ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனம் தொடர்ந்து உயிர்வாழவும், செழித்து வளரவும் அவர்கள் மற்ற கிரகங்களுக்கு செல்லவதை முக்கிய இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்று கூறி இருந்தார் எலான் மஸ்க் (Elon Musk)!

வெறும் வாய் வார்த்தையோடு நில்லாமல், மனிதர்களையும், அவர்களோடு சில "சரக்கு" பொருட்களையும் - முதலில் சந்திரனுக்கும், பின்னர் செவ்வாய் கிரகத்திற்கும் கொண்டு செல்லக்கூடிய ஸ்டார்ஷிப் (Star ship) என்கிற ஒரு விண்கலத்தையும் அவர் உருவாக்கி வருகிறார்!

அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!

இருந்தாலும் கூட?

இருந்தாலும் கூட?

எல்லாம் சரியாக நடந்துகொண்டிருந்தாலும் கூட, செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை. அது ஒரு சவாலான, கடினமான மற்றும் நீண்ட பயணமாக இருக்கும்.

இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், ​​மணிக்கு 39,600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒரு விண்கலத்தை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தை அடைய ஏழு மாதங்கள் ஆகும்!

நாசாவின் புதிய யோசனை!

நாசாவின் புதிய யோசனை!

இருப்பினும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிடம் இன்னொரு யோசனை உள்ளது.

அந்த யோசனை பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையேயான பயண நேரத்தை பல மாதங்களில் இருந்து சில நாட்களாக குறைக்கலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 45 நாட்களாக குறைக்கும்!

மேலும் இந்த புதிய யோசனைக்காக, நாசா ஒரு விபரீதமான காரியத்தையும் செய்யவுள்ளது.

அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

அதென்ன காரியம்?

அதென்ன காரியம்?

வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கத்தின் கீழ், நாசா ஒரு நியூக்ளியர் ராக்கெட்டை (Nuclear Rocket) உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதாவது அணுசக்தி மூலம் இயங்கும் ஒரு ராக்கெட்டை தயாரிக்க உள்ளது. அணுசக்தி என்றாலே விபரீதம் தானே!

இருப்பினும் நாசாவிற்கு வேறு வழி இல்லை. அணு வெப்ப மற்றும் அணு மின்சார உந்துவிசையால் (Nuclear Thermal and Nuclear Electric Propulsion - NTNEP) மட்டுமே, மனிதர்களை வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்ல முடியும்!

பணயம் வைக்கப்படும் மனித உயிர்கள்?

பணயம் வைக்கப்படும் மனித உயிர்கள்?

வெறும் 45 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைவதென்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் வளர்ச்சி தான். அதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் நியூக்ளியர் ராக்கெட்டின் மூலம் மனித உயிர்கள் பணயம் வைக்கப்படும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!

பொதுவாகவே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் எக்கச்சக்கமான சிக்கல்கள், ஆபத்துகள் உள்ளன. அதையும் அணு சக்தியால் இயங்கும் ராக்கெட்டில் அனுப்பினால் ஆபத்து இரட்டிப்பாகும்.

குறிப்பாக நியூக்ளியர் ராக்கெட்டில் உள்ள உள்ள நியூக்ளியர் ரியாக்டர் ஆனது கதிர்வீச்சுகளை வெளியிடலாம்; அதுவே விண்வெளி வீரர்களை கடுமையாக பாதிக்கலாம்!

ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் "விசித்திரமான" பச்சை நிற ஒளி.. சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

1950-களில் இருந்தே இந்த வேலை நடக்கிறது!

1950-களில் இருந்தே இந்த வேலை நடக்கிறது!

அணு வெப்பத்தை (Nuclear-Thermal) உந்துவிசையாக (Propulsion) பயன்படுத்தி விண்வெளி பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற யோசனை முற்றிலும் புதிய யோசனை அல்ல.

1950-களில் இருந்தே அமெரிக்கா, சோவியத் யூனியன் (ரஷ்யா) ஆகிய இரண்டு நாடுகளுமே அணு-வெப்ப உந்துவிசைக்கான (NTP) சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. தற்போது அந்த சாத்தியகூறுகள் "இறுதி கட்டத்தை" அடைந்து விட்டது போல் தெரிகிறது!

Photo Courtesy: NASA / Wikipedia

Best Mobiles in India

English summary
NASA Planning to Reach Mars In Just 45 Days Using Its New Nuclear Thermal Propulsion Rocket

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X