NASA-வின் கண்களில் மீண்டும் சிக்கிய "கோஸ்ட்".. விஞ்ஞானிகளை குழப்பும் 71 ஆண்டுகால மர்மம்!

|

பல ஆண்டுகளாக, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றித்திரியும் "கோஸ்ட்" ஒன்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் (NASA) கண்களில் மீண்டும் சிக்கி உள்ளது.

என்னது அது? அது "கோஸ்ட்" (Ghost) என்று அழைக்கப்பட என்ன காரணம்? அது ஏன் விண்வெளியில் சுற்றித்திரிகிறது? முதலில் எப்போது சிக்கியது? இதோ விவரங்கள்:

நேற்றோ, இன்றோ அல்ல.. 1990-ல் இருந்து..!

நேற்றோ, இன்றோ அல்ல.. 1990-ல் இருந்து..!

உங்களில் சிலருக்கு, நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்க்கோப்பை (Hubble space telescope) பற்றி பெரிய அளவிலான அறிமுகமே தேவைப்படாது.

ஏனென்றால் ஹப்பிள் தொலைநோக்கியானது - கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் நம்பமுடியாத புகைப்படங்களை பதிவு செய்து அனுப்புவதற்கு பெயர்போன மிகவும் பிரபலமான விண்வெளி தொலைநோக்கி ஆகும்.

நேற்றோ, இன்றோ அல்ல.. கடந்த 1990 ஆம் ஆண்டில் டிஸ்கவரி (Discovery) என்கிற விண்கலத்தின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதில் இருந்து, ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் ஆனது பல நம்பமுடியாத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. அந்த பட்டியலில் "பழைய கோஸ்ட்" ஒன்றும் இணைந்துள்ளது!

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

பில்லியன் கணக்கான ஆண்டுகளாக சுற்றி திரிகின்றன!

பில்லியன் கணக்கான ஆண்டுகளாக சுற்றி திரிகின்றன!

'கோஸ்ட்' என்றதுமே ஆவி என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். நாசாவின் ஹப்பிள் டெலஸ்க்கோப் வழியாக "மீண்டும்" கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோஸ்ட் - ஒரு இன்ட்ராக்ளஸ்டர் லைட் (Intracluster light) ஆகும். இதை கோஸ்ட் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் உள்ளது.

நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களை (Galaxies) உள்ளடக்கிய ஜெயின்ட் க்ளஸ்டர்களில் (Giant clusters), சில நட்சத்திரங்கள் (Stars) எந்தவொரு விண்மீன் திரளுடனும் இணையாமல் / சேராமல் தொலைந்துபோன ஆன்மாக்களை போல அலைந்து திரிகின்றன; மற்றும் அவைகள் ஒரு பேயை போல ஒளி வீசுகின்றன.

இதன் விளைவாகவே, மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்களில் இருந்து வரும் இன்ட்ராக்ளஸ்டர் லைட்டை, நாசா விஞ்ஞானிகள் "கோஸ்ட் லைட்" என்று அழைக்கின்றனர்.

பூமிக்கு மிக அருகில்!

பூமிக்கு மிக அருகில்!

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் வழியாக ஒரு கோஸ்ட் லைட் கண்டுபிடிக்கப்படுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல.

கடந்த 1951 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண 18 இன்ச் டெலஸ்க்கோப் வழியாக, விண்வெளியில் ஒரு விசித்திரமான ஒளி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது கோஸ்ட் லைட் என்கிற பெயரை பெற்றது.

அதை ஃபிரிட்ஸ் ஸ்விக்கி என்கிற வானியலாளர் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த கோஸ்ட் லைட் ஆனது கோமா க்ளஸ்டரில் (Coma cluster) இருந்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் 1,000 விண்மீன் திரள்களை கொண்ட கோமா க்ளஸ்டர், பூமிக்கு மிகவும் அருகில் உள்ள க்ளஸ்டர்களில் ஒன்றாகும். இது பூமியில் இருந்து சுமார் 330 மில்லியன் ஒளி ஆண்டுகள் என்கிற தொலைவில் உள்ளது.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

இன்னமும் ஒரு மர்மமாகவே உள்ளது!

இன்னமும் ஒரு மர்மமாகவே உள்ளது!

ஒரு கோஸ்ட் லைட் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 71 ஆண்டுகள் ஆகியும் கூட அது இன்னமும் கூட ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கோஸ்ட் லைட்-ஐ உருவாக்கும் நட்சத்திரங்களானது, கிளஸ்டர் உருவாகும் ஆரம்ப கட்டங்களில் இருந்தே "வீடற்ற நிலையில்" இருந்துள்ளன. ஆனால் இந்த நட்சத்திரங்களை "வீடற்றவர்களாக" மாற்றியது எது என்கிற கேள்விக்கான பதில் - இன்னமும் ஒரு மர்மமாகவே உள்ளது .

ஏனென்றால், தற்போது வரை கிடைத்துள்ள விவரங்கள் மற்றும் அதன் மூலம் உருவான கோட்பாடுகளை கொண்டு எதையும் தெளிவாக கூற முடியாது. ஆனால் இந்த "கோஸ்ட் நட்சத்திரங்கள்" ஆனது பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்!

தேடல் விரிவுபடுத்தப்படும்.. மர்மம் விலக்கப்படும்!

தேடல் விரிவுபடுத்தப்படும்.. மர்மம் விலக்கப்படும்!

கோஸ்ட் லைட் தொடர்பான புரிதலில், ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்க்கோப்பை மட்டுமின்றி, நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும் (James Webb Space Telescope) ஈடுபடுத்தப்படுகிறது.

ஜேம்ஸ் வெப்பில் உள்ள இன்ஃப்ரா-ரெட் திறன்கள் ஆனது பிரபஞ்சத்தின் ஆழமான பகுதிகளில் உள்ள இன்ட்ரா கிளஸ்டர் நட்சத்திரங்களுக்கான தேடலை பெரிதும் விரிவுபடுத்தும், அந்த தேடலின் முடிவில் கோஸ்ட் லைட் தொடர்பான மர்மங்கள், புதிர்கள் தீர்க்கப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Photo Courtesy: NASA / ESA / STScI / James Jee, Yonsei University / Joseph DePasquale, STScI

Best Mobiles in India

English summary
NASA Found Ghost Light Which Wandering Around in Space For Billions Of Years Using Hubble Telescope

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X