சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் (NASA) கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரகம் (Mars) தொடர்பான மிகவும் தனித்துவமான உண்மை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் குழுவொன்று 'அசால்ட்' ஆக கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளது!

அதென்ன கண்டுபிடிப்பு? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதோ விவரங்கள்:

முதல் ஆதாரம்!

முதல் ஆதாரம்!

இந்திய புவி காந்தவியல் கழகத்தை (Indian Institute of Geomagnetism) சேர்ந்த வானியலாளர்கள் குழுவொன்று, செவ்வாய் கிரகத்தில் சாலிட்டரி வேவ்ஸ் (Solitary waves), அதாவது தனித்துவமான மின்சார புலத்தின் ஏற்ற இறக்கங்கள் (Distinct electric field fluctuations) இருப்பதற்கான முதல் ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி அறிந்துகொள்ள, பூமியின் காந்த மண்டலத்தை (Earth's Magnetosphere) பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!

வெறும் கவசம் மட்டுமல்ல.. முக்கியமான காரணமும் கூட!

வெறும் கவசம் மட்டுமல்ல.. முக்கியமான காரணமும் கூட!

நமக்கெல்லாம் தெரிந்தபடி, பூமி கிரகத்தை சுற்றி ஒரு காந்த மண்டலம் உள்ளது. இது அடிப்படையில் காந்தப்புலத்தால் (Magnetic field) உருவான பூமிக்கான ஒரு இயற்கையான கவசம் ஆகும்.

இந்த காந்தப்புலம், பூமியின் மையத்தில் உள்ள உருகிய இரும்பின் இயக்கத்தால் (Motion of molten iron) உருவாக்கப்படுகிறது. மேலும் இது நமது கிரகத்தை தீங்கு விளைவிக்கும் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சிலிருந்தும் (Cosmic radiation) பாதுகாக்கிறது.

இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் பூமி கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணமே காந்தப்புலம் தான்!

ஆனால் செவ்வாய் கிரகத்தில்.. கதையே வேறு!

ஆனால் செவ்வாய் கிரகத்தில்.. கதையே வேறு!

காந்தப்புலம் என்று வந்துவிட்டால் செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால், செவ்வாய் கிரகத்தில் காந்த மண்டலமே கிடையாது.

ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அது மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்து அகற்றப்பட்டது. அதன் விளைவாக காஸ்மிக் கதிர்வீச்சுகள் நேரடியாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் (Martian atmosphere) புகுந்தன மற்றும் அந்த கிரகத்தை உயிர்கள் வாழத்தகாத இடமாக மாற்றின.

ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

காரணமும் கிடைக்கவில்லை.. ஆதாரமும் கிடைக்கவில்லை!

காரணமும் கிடைக்கவில்லை.. ஆதாரமும் கிடைக்கவில்லை!

செவ்வாய் கிரகம் தனது காந்த மண்டலத்தை இழந்து விட்டது என்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகளால், அதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

மேலும் செவ்வாய் கிரகத்தில் அடிக்கடி சாலிட்டரி வேவ்ஸ் (Solitary waves) நிகழ்கிறது என்பதை யூகித்த விஞ்ஞானிகளால் அவற்றை ஒருபோதும் கண்டறிய முடியவில்லை.

அதுமட்டுமின்றி இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட எந்தவொரு விண்வெளி மிஷன்களாலும் (Mars Mission) கூட இதுதொடர்பான ஆதாரத்தை சேர்க்க முடியவில்லை.

ஆனால் இந்திய விஞ்ஞானிகளின் கண்களில் சிக்கியது!

ஆனால் இந்திய விஞ்ஞானிகளின் கண்களில் சிக்கியது!

கடந்த நவம்பர் 2013-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் (NASA) அனுப்பட்ட மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) ஆர்பிட்டர் மூலம் சேகரிக்க்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த இந்திய விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தின் சாலிட்டரி வேவ்ஸை (Solitary waves) கண்டறிந்தனர்.

மேலும் இந்த சாலிட்டரி வேவ்ஸ் ஆனது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் (Mars Surface) இருந்து சுமார் 1,000 முதல் 3,500 கிமீ உயரத்தில், விடியற்காலையில் மற்றும் பிற்பகல் முதல் அந்தி சாயும் வேளையில் தான் பெரும்பாலும் ஏற்படுகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது

இந்த கண்டுபிடிப்பின் மூலம் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் தொடர்பான பல புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்!

PhotoCourtesy: NASA / Wikipedia

Best Mobiles in India

English summary
Indian Scientists Found The Very First Evidence Of Solitary Waves On Mars Why Its So Important

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X