ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் "விசித்திரமான" பச்சை நிற ஒளி.. சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

|

அறிவியல் புனைக்கதைகள் (Science Fictions) படிக்கும் பலருக்கும், விண்வெளியில் பச்சை நிறம் தோன்றினாலே அது வேற்றுகிரக வாசிகளாகத்தான் இருக்கும்.. "அந்த" பச்சை நிற ஒளி ஆனது ஏலியன்களின் பறக்கும் தட்டுகளால் (UFO - Unidentified flying object) விட்டுச்செல்லப்பட்ட ஒளியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் ஏற்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

ஆனால், நாம் இந்த கட்டுரையில் பார்க்க போவது "அந்த மாதிரியான" பச்சை நிற ஒளியை பற்றி அல்ல! மிகமிக அரிதான ஒரு விண்வெளி நிகழ்வை (Rare Space Event) பற்றியே ஆகும்!

என்னது அது? மிகவும் அரிதான நிகழ்வு என்று கூறும் அளவிற்கு அதில் அப்படி என்ன ஸ்பெஷல்? குறிப்பிட்ட பச்சை நிற ஒளியை வெறும் கண்களால் பார்க்கலாமா? அது எப்போது விண்ணில் தெரியும்? இதோ விவரங்கள்:

பூமியை நோக்கி வரும் அந்த பச்சை நிற ஒளி.. உண்மையில் என்னது?

பூமியை நோக்கி வரும் அந்த பச்சை நிற ஒளி.. உண்மையில் என்னது?

உங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய விண்வெளி நிகழ்வொன்று, அடுத்த வாரம் நடக்க உள்ளது. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதை வெறும் கண்களால் கூட பார்க்கலாம்.

அந்த நிகழ்வின் ஹிரரோ - மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் ஆகும்!

கற்காலத்திற்கு பிறகு.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 50,000 ஆண்டுகளில், ஒருமுறை கூட பூமிக்கு அருகில் வராத இந்த பச்சை நிற வால் நட்சத்திரமானது, தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது!

அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!

சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

அந்த பச்சை நிற வால் நட்சத்திரத்திற்கு Comet C/2022 E3 (ZTF) என்றும் பெயரிட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அது எப்போது பூமிக்கு அருகில் வரும் என்கிற சரியான தேதிகளையும் கணித்து உள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வருகிற பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில், குறிப்பிட்ட பச்சை நிற வால் நட்சத்திரமானது இரவு நேர வானத்தில் மிகவும் பிரகாசமாக தெரியும்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த பச்சை நிற வால் நாட்சத்திரத்தை பைனாகுலர்கள், தொலைநோக்கிகள் வழியாக மட்டுமின்றி - உங்களுக்கு நல்ல கண்பார்வை இருந்தால் - வெறும் கண்களால் கூட பார்க்க முடியும்!

பூமிக்கு அருகில் வரும் என்றால்.. எவ்வளவு அருகில்?

பூமிக்கு அருகில் வரும் என்றால்.. எவ்வளவு அருகில்?

பூமியை மிகவும் நெருக்கமாக கடக்கும் போது, இந்த பச்சை வால் நட்சத்திரத்திற்கும் நமது பூமியின் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளத்திற்கும் இடையே சுமார் 28 மில்லியன் மைல்கள் என்கிற தூரம் இருக்கும்.

மேலோட்டமாக பார்த்தால், இது மிகப்பெரிய தூரமாக தெரியலாம். ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரை, இது மிகவும் நெருக்கமாக தூரம் ஆகும். அறியாதோர்களுக்கு பூமிக்கும், நிலவிற்கு இடையே உள்ள தூரம் - சுமார் 238,855 மைல்கள் ஆகும்!

அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

கடந்த 10 மாதங்களாக?

கடந்த 10 மாதங்களாக?

இந்த பச்சை நிற வால் நட்சத்திரம், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதியன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்விக்கி ட்ரான்சியன்ட் ஃபெசிலிட்டியில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கிய இந்த பச்சை நிற வால் நட்சத்திரமானது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது!

ஏனென்றால், கோமெட் சி/2022 இ3 (இசட்டிஎஃப்) என்கிற பச்சை நிற வால் நட்சத்திரமானது இந்த 2023 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது!

வால் நட்சத்திரம் ஏன் மினுமினுக்கிறது என்று தெரியுமா?

வால் நட்சத்திரம் ஏன் மினுமினுக்கிறது என்று தெரியுமா?

வால் நட்சத்திரங்கள் ஆனது உறைந்த வாயுக்கள், பாறைகள் மற்றும் சூரிய குடும்பத்தின் உருவாக்கத்தின் போது மிச்சமான தூசிகள் ஆகியவற்றினால் உருவான பனிக்கட்டி உடல் (Icy Body) ஆகும்.

ஒரு வால் நட்சத்திரமானது சூரியனுக்கு அருகில் செல்லும் போது, அது வெப்பமடையும்; அதன் விளைவாக அது தன்னுள் உள்ள வாயுக்களை வெளியிட தொடங்கும், அதன் விளைவாகவே வால் நட்சத்திரங்கள் ஒளியை உமிழ்கின்றன!

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

மனிதன் முதன்முதலாக ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தது எப்போது?

மனிதன் முதன்முதலாக ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தது எப்போது?

அது 1680 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கிர்ச்சின் வால் நட்சத்திரமே (Kirch's Comet) ஆகும். இது கிரேட் வால் நட்சத்திரம் (Great Comet) என்றும், நியூட்டனின் வால் நட்சத்திரம் (Newton's Comet) என்றும் கூட அழைக்கப்படுகிறது. இது பதினேழாம் நூற்றாண்டில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்மீன்களிலும் ஒன்றாகும்.

இதுதான் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வால் நட்சத்திரம் ஆகும். இதை கண்டுபிடித்தவர் இது காட்ஃபிரைட் கிர்ச் (Gottfried Kirch) ஆவார்!

Photo Courtesy: Dan Bartlett / Nasa / AFP / Getty Images / Wikipedia

Best Mobiles in India

English summary
Green Comet Coming Close To Earth Do Not Miss This Rare Space Event Happen on February 1 and 2 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X