Just In
- 2 hrs ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 11 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 16 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- Sports
திறமை இருந்தும் வாய்ப்பில்லை.. நியூசி, உடனான முதல் டி20.. ரிஸ்க் எடுக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா??
- News
மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இனி YOUTUBE ஷார்ட்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்.!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல் முன்பு முழு நேர வீடியோக்களை பதிவிடுவோர்களுக்கு மட்டுமே அவர்களது பார்வையாளர்கள் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் பணம் ஈட்டும் வசதியை யூடியூப் வழங்கி வந்தது.

யூடியூப் சேனல்
இதன் காரணமாகவே பல்வேறு மக்கள் தங்களுக்கு என்று புதிய யூடியூப் சேனல்களை துவங்கி மக்களைக் கவரும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு, அதிக சப்ஸ்கிரைப்ர்களை பெருக்கி, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் ஷார்ட்ஸ்
ஆனால் இப்போது முழு நேர வீடியோக்களை விட யூடியூப் ஷார்ட்ஸ் எனும் 30 நொடி முதல் 1 நிமிடம் வரை செல்லும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்று வருகின்றன. குறிப்பாக இந்த யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் பணம் ஈட்டும் வசதியைக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகவே யூடியூப் கிரியேட்டர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம்
இந்நிலையில் கூகுள் நிறுவனம் யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம் (YPP) என்ற திட்டத்தின் மூலம் ஷார்ட்ஸ் மானிடைசேஷன் எனும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது இதன் மூலம் யூடியூப் கிரியேட்டர்கள் தங்களது ஷார்ட்ஸ் வீடியோக்களின் மூலமே விளம்பரங்களைக் காண்பித்து, அதன் மூலம் பணம் ஈட்ட முடியும் கூறப்படுகிறது.

எப்போது முதல்?
வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த வசதி யூட்யூப் தளத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் யூட்யூப் க்ரியேட்டர்கள் புதுவிதமான வழிகளில் ஷார்ட்ஸ் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சில தகுதிகளை நிர்ணயித்துள்ளனர்?
குறிப்பாக வீடியோ கிரியேட்டர்கள் ஷார்ட் வீடியோக்கள் மூலம் பணம் பார்க்க விரும்பினால், அதற்கு என சில தகுதிகளை நிர்ணயித்துள்ளனர். அதாவது தங்கள் ஷார்ட்ஸ் வீடியோக்களை பணமாக்க நினைபவர்கள், ஆயிரம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அவர்களது ஷார்ட் வீடியோக்கள் 90 நாட்களில் 1 கோடி பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தகுதியைப் பூர்த்தி செய்யும் கிரியேட்டர்கள் இந்த பணமாக்கல் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை..
மேலும் ஷார்ட் வீடியோ பீட்களுக்கு இடையே வரும் விளம்பரத்தை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அதனை பொறுத்து பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஷார்ட் வீடியோக்களில் இசையைப் பயன்படுத்தி இருந்தால், எத்தனை டிராக் உள்ளதோ, அந்தந்த மியூசிக் பார்டனர்களுக்கும் தொகை பிரித்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சொந்த ஆடியோ..
ஒருவேளை மியூசிக் இல்லாமல் சொந்த ஆடியோ எனில் தொகை முழுவதும் வீடியோ கிரியேட்டர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக யூடியூப் கொண்டுவரும் இந்த புதிய முயற்சி பல்வேறு மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470