நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Nothing போன்.. IP64 ரேட்டிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போன் நாளை மாலை 4 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை மற்றம் அம்சங்கள் வெளியாகி உள்ளது.
நத்திங் போன் 4ஏ அம்சங்கள் (Nothing Phone 4a Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் நத்திங் போன் 4ஏ மாடல் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி(octa core Snapdragon 7s Gen 4 SoC) சிப்செட் உடன் நத்திங் போன் 4ஏ மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் நத்திங் போன் 4ஏ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் நத்திங் போன் 4ஏ மாடல் விற்பனைக்கு வரும். மேலும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Ultrasonic In-screen Fingerprint Sensor) வசதி இந்த புதிய நத்திங் ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5400எம்ஏஎச் பேட்டரி உடன் நத்திங் போன் 4ஏ மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 50W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) நத்திங் போன் 4ஏ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் புதிய நத்திங் போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 4ஏ போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இன்னும் இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. ஆனால் இந்த வேரியண்ட்கள் விலை இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த புதிய நத்திங் ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








