செல்போனுக்கு தாலிக் கட்டிய மாப்பிள்ளை., தனக்கு தானே தாலிக் கட்டிய மணப்பெண்: வீடியோகால் திருமணம்!

|

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் செல்போன் வீடியோ கால் மூலம் திருமண நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை துடப்பதற்கு மத்திய மாநில அவசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று அதிகரித்து வண்ணமே இருந்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்து உள்ளது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?

7000-த்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்

7000-த்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 7000-த்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பதும் 937 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை அங்குமட்டும் 6000-த்துக்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவாவில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு மட்டும் 100 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது

அதேபோல் குஜராத் மாநிலத்தில் 17 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், 2 நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழகத்தின் சில மாநிலங்கள் உட்பட பல பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தி கண்காணித்தல்

தனிமைப்படுத்தி கண்காணித்தல்

இதையடுத்து சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. இதையடுத்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டே வருகிறது.

போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது

அதேபோல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் தற்போது தங்கியுள்ள பகுதிகளிலேயே தேங்கியுள்ளனர். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாகவும் மக்கள் இருக்கும் இடத்தில் தங்கி இருந்து வருகின்றனர். அதேபோல் மாநில அரசுகளும் எல்லைகளை மூடியுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு முன்பு நிச்சியிக்கப்பட்ட திருமணங்கள்

கொரோனா பரவலுக்கு முன்பு நிச்சியிக்கப்பட்ட திருமணங்கள்

கொரோனா பரவலுக்கு முன்பு நிச்சியிக்கப்பட்ட திருமணங்கள் சில பகுதிகளில் குறைந்த நபர்களோடும் அல்லது இரு வீட்டார்கள் மட்டும் வைத்து திருமணம் நடத்தி வருகின்றனர். அதேபோல் கேரளா மற்றும் லக்னோவில் இருக்கும் தம்பதிகள் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை நடத்தியுள்ளனர்.

ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நிச்சயம்

ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நிச்சயம்

கேரளாவில் வசித்து வருபவர் ஸ்ரீஜித், வங்கி அதிகாரியாக பணி புரிந்து வரும் இவர் கோட்டயம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணிற்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சியிக்கப்பட்டது. ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நிச்சியிக்கப்பட்டதையடுத்து அஞ்சனா என்ற பெண் லக்னோவில் இன்ஜினியயராக பணி புரிந்து வருகிறார்.

மாநில எல்லைகள் மூடப்பட்டன

மாநில எல்லைகள் மூடப்பட்டன

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டன. இதனால் என்ன செய்வது என்று சிந்தித்திருந்த நிலையில்., முடிவெடுத்த நாளில் திருமணம் நடத்தியே ஆக வேண்டும் என இருவீட்டாரும் முடிவெடுத்துள்ளனர்.

வீடியோ காலின் மூலம் திருமணம்

வீடியோ காலின் மூலம் திருமணம்

இதையடுத்து மணப்பெண் அஞ்சனா லக்னோவில் திருமண கோலத்தில் இருந்தபடியும், மணமகன் ஸ்ரீஜித் கேரளாவில் மணமகன் கோலத்திலும் வீடியோ காலின் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

தந்தையுடன் வீடியோகால்., வெடித்து சிதறிய செல்போன்: பாதிப்படைந்த பெண்ணின் கண்கள்!தந்தையுடன் வீடியோகால்., வெடித்து சிதறிய செல்போன்: பாதிப்படைந்த பெண்ணின் கண்கள்!

தாலியை போனுக்கு கட்டினார்

தாலியை போனுக்கு கட்டினார்

மணமகன் ஸ்ரீஜித் தன் கையில் இருக்கும் தாலியை போனுக்கு கட்டினார். அதேபோல், மணமகள் அஞ்சனா அவர் கையில் இருந்த தாலியை தனக்கு தானே கழுத்தில் கட்டிக்கொண்டார். அதேபோல் மணமக்கள் அருகில் இருந்த இரு வீட்டாரும் அட்சனை தூவி ஆசிர்வதித்தனர். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
young couple married via whatsapp videocall during corona lockdown

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X