எல்லாம் ஒரே நேரத்துல வருதே.. மார்ச் 16 முதல் ஸ்மார்ட்போன்கள் விலை உயரும் என அறிவிப்பு.. எவ்வளவு உயரும்?
நாடு முழுவதுமாக ஏற்பட்டுள்ள, வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு காரணமாக.. இனி வரும் நாட்களில் இதெல்லாம் விலை உயரப்போகிறதோ என்று பீதி இந்தியர்கள் மத்தியில் நிலவும் வேளையில்.. ஸ்மார்ட்போன்கள் மீதான விலை உயர்வு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன? 2026 மார்ச் 16 ஆம் தேதி முதல் தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் என்று ஒப்போ (OPPO) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. தொடர்ந்து நிலவி வரும் விநியோக பற்றாக்குறையால் ஏற்படும் உதிரிபாகங்களின் விலை உயர்வு காரணமாக, புதிய விலை திருத்தங்கள் இந்தியா உட்பட அனைத்து சந்தைகளிலும் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

எந்தெந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயரும்? ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் கூற்றுப்படி, நிலைமையை "கவனமாக மதிப்பிட்ட பிறகு" இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விலை உயர்வானது - ஒப்போவின் கே-சீரிஸ் மற்றும் ஏ-சீரிஸின் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களையும் பாதிக்கும்.
எந்தெந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைகளில் மாற்றம் இருக்காது? ஒப்போவின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன பைண்ட் சீரீஸ் (Find Series), ரெனோ சீரீஸ் (Reno Series) மற்றும் ஒப்போ பேட் சீரீஸ் (OPPO Pad Series) ஆகியவைகள் "தற்போதைக்கு" அவற்றின் தற்போதைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலை உயரும்? ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய 2 நிறுவனங்களுமே தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலைகள் எவ்வளவு உயரும் என்கிற விவரங்களை பகிரவில்லை. இருப்பினும், சந்தை போக்குகளின் படி, இந்த அதிகரிப்பு சுமார் 15 முதல் 20 சதவீதமாக இருக்கலாம்.
ஆக (உதாணரத்திற்கு) ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனை விட சுமார் 6 சதவீதம் அதிக விலையில்.. ரூ.47,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை (மார்ச் 16 க்கு பின்னர்) ரூ.50,000 என்கிற பட்ஜெட்டை தாண்டலாம். முன்னதாக விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வானது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையை ரூ.51,999 ஆக உயர்த்தும் என்கிற லீக்ஸ் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, கடந்த 2025 நவம்பர் மாட்டாஹத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஜீலை 2025 இல் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் (OnePlus Nord 5 Series) உட்பட ஏற்கனவே இருக்கும் பிற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் விலை உயர்வை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, விலை அதிகமாக உயரக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஒப்போ கே14எக்ஸ் (OPPO K14x), ஒப்போ கே13 சீரீஸ் (Oppo K13 Series), ஒப்போ கே12எக்ஸ் (Oppo K12x), ஒப்போ ஏ6 சீரீஸ் (Oppo A6 Series) மற்றும் ஒப்போ ஏ5 சீரீஸ் (Oppo A5 Series) ஸ்மார்ட்போன்கள்
இருக்கும்
OPINION: பேட் நியூஸ் என்னவென்றால் - மேற்கண்ட ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் ஆனது சரியான எவ்வளவு விலை உயர்வை பெற்றுள்ளன என்பதை அறிய நாம் மார்ச் 17 வரை காத்திருக்க வேண்டியது அவசியம். குட் நியூஸ் என்னவென்றால் - மேற்கண்ட மாடல்களை "அதிகரிக்கப்படாத" விலையில் வாங்க உங்களுக்கு நேரம் இருக்கிறது.
ஒருவேளை மேற்கண்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்க திட்டமிட்டு இருந்தால், அதை அடுத்த வாரம் (மார்ச் 17 ஆம் தேதிக்கு பின்) வாங்குவதற்கு பதிலாக இப்போதே வாங்குமாறு பரிந்துரைக்கிறோம்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் மட்டுமே தங்களுடைய ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிகரிக்க போவதில்லை, மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் அதிகரித்து வரும் கூறுகளின் விலைகளுடன் போராடி வருகின்றனர், எனவே "ஸ்மார்ட்போன்கள் மீதான விலை உயர்வு" எல்லா பிராண்டுகளிலும் சாத்தியமே.
குறிப்பிடத்தக்க வண்ணம், சாம்சங் (Samsung) மற்றும் ரியல்மி (Realme) ஏற்கனவே இந்தியாவில் தங்கள் சில ஸ்மார்ட்போன்களின் (தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள்) விலைகளை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் விவோ (Vivo) மற்றும் ஐக்யூ (iQOO)நிறுவனங்கள் விரைவில் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய தேவை, ஆசை கொண்டவர்கள் விரைவாக செயல்படவும்.


Click it and Unblock the Notifications








