வாடா குட்டி பையா.. 3 கலர்களில் புது OnePlus மினி போன்.. 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங், LUMO கேமரா!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது ஒருவழியாக அதன் அடுத்த காம்பாக்ட் (மினி) ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலை பொதுவெளிக்கு கொண்டு வந்தது. ஒரு நேரடி ஒளிபரப்பின் போது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் காட்சிப்படுத்தப்பட்டது
அதன் மூலம் - ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது கைகளுக்குள் பொருந்தும்படி எவ்வளவு காம்பாக்ட் ஆக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதையும், இதுவரை நாம் பார்த்த மினி ஸ்மார்ட்போன்களிலேயே இது வலுவான ஃபிளாக்ஷிப் செயல்திறனை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒன்பிளஸ் 15டி மூன்று வங்கியான கலர்களில் கிடைக்கும்: பியூர் கோகோ, ரிலாக்ஸிங் மேட்சா மற்றும் ஹீலிங் ஒயிட் சாக்லேட். கடைசியாக உள்ள ஒயிட் கலர் ஆப்ஷன் மிகவும் தனித்துவமானதாக தெரிகிறது. இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் மெட்டல் பிரேம் மற்றும் பேக் பேனல் ஆகிய இரண்டிலும் மைக்ரோ-ஆர்க் ஆக்சிடேஷன் செயல்முறையை பயன்படுத்தி ஒரு சீரான வெள்ளை பூச்சை உருவாக்கியுள்ளது.
மற்ற இரண்டு கலர்களும் மிகவும் பழக்கமான ஏஜி ஃப்ரோஸ்டட் கிளாஸ் பேக்கை பயன்படுத்துகின்றன, இது சற்று மேட் டெக்ச்சரை பராமரிக்கிறது; ஆகையால் போனில் பதியும் கைரேகைகள் கட்டுக்குள் வைக்கப்படலாம். ஆனால் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் உண்மையான ஹைலைட் - அதன் காம்பாக்ட் டிசைன் தான்!
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் சுமார் 71.82 மிமீ அகலமும் (Width), சுமார் 194 கிராம் எடையும் கொண்டதாக இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி எடை சமமான சமநிலையில் இருப்பதாக கூறுகிறது. இது நீண்ட நேரம் பயன்பாட்டின் போதும் கூட ஸ்மார்ட்போனை வசதியாக உணர வைக்கும்.
முன்பக்கத்தில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது மெலிதான பெசல்களுடன் 6.32-இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இன்னும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் - இதன் பேட்டரி. ஒப்பீட்டளவில் சிறிய அளவு இருந்தபோதிலும், இது 7500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த அளவிலான பெரிய பேட்டரி - சார்ஜிங் சப்போர்ட்டில் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ்-ஐ வழங்குவது இன்னொரு சிறப்பம்சம். மேலும் இதில் கேமிங்கிற்கான பைபாஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. கேமராக்களை பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட லுமோ பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி உள்ளது. மீதமுள்ள கேமராக்கள் முழுமையாக விவரிக்கப்படவில்லை.
குறிப்பிடப்பட்ட பிற அம்சங்களில் - 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், மேம்படுத்தப்பட்ட ஹாப்டிக்ஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்கள் ஆகியவைகள் அடங்கும். ஒன்பிளஸ் 15டி ஆனது இந்த மாத இறுதியில் சீனாவில் றிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு விரைவில் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகமாகும் என்பதிலும் சந்தேகேம் வேண்டாம்.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடனான 5850mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








