Home
Mobile

நீ வா ராசா.. 6500mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. புது OPPO 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ஏ6எஸ் 5ஜி (OPPO A6s 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஒப்போ போன் வரும் மார்ச் 20-ம் தேதி முன்பு இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ ஏ6எஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A6s 5G Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் புதிய ஒப்போ ஏ6எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

நீ வா ராசா.. 7000mAh பேட்டரி.. புது OPPO 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் ஒப்போ ஏ6எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையன்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஒப்போ ஏ6எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

ஒப்போ ஏ6எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஜெமினி AI அசிஸ்டண்ட் போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன. மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ஒப்போ ஏ6எஸ் 5ஜி போன் வெளியாகும்.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) உடன் ஒப்போ ஏ6எஸ் 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6500mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ6எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A6s 5G India launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X