Home
Mobile

பழைய ஃபார்முக்கு திரும்பி வந்த Xiaomi.. 200MP குவாட் கேமரா செட்டப் உடன் புதிய போன்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஆனது இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே அதன் அடுத்த அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்யலாம் என்று தகவல் கிடைத்து உள்ளது. அது ஷாவ்மீ 18 அல்ட்ரா (Xiaomi 18 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும்.

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன ஸ்மார்ட் பிகாச்சு பகிர்ந்து கொண்ட தகவலின்படி, ஷாவ்மீ 17 அல்ட்ராவிற்கு பயன்படுத்திய அதே வெளியீட்டு முறை இந்தாண்டும் பின்பற்றப்படலாம். பழைய அல்ட்ரா மாடல்களை போல ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, வரவிருக்கும் ஷாவ்மீ 18 அல்ட்ரா மாடல் ஆனது இந்த ஆண்டின் இறுதியில், ஒருவேளை டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகலாம் என்பது போல் தெரிகிறது.

ஃபார்முக்கு வந்த Xiaomi.. 200MP குவாட் கேமரா செட்டப் உடன் புதிய போன்!

இந்த ஸ்மார்ட்போன் கேமரா செட்டப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணக்கூடும் என்றும், இதற்காக ஷாவ்மீ நிறுவனம் ஒரு புதிய குவாட்-கேமரா செட்டப்பை சோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது - இது பாரம்பரியமான குவாட் கேமரா அமைப்பிலிருந்து விலகி, அதற்கு பதிலாக ஒரு மெக்கானிக்கல் ஜூம் சொல்யூஷனை அறிமுகப்படுத்திய ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடலில் இருந்தும் கொஞ்சம் வேறுபடும்.

இந்த லீக் உண்மையாகும் பட்சத்தில், அதிக போக்கல் லெங்த் விருப்பங்களை வழங்கவும், ஒட்டுமொத்த கேமரா பல்துறைத்திறனை மேம்படுத்தவும் ஷாவ்மீ அதன் ஃபோர்-லென்ஸ் உள்ளமைவுக்கு திரும்பலாம். நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 17 அல்ட்ராவானது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 15 அல்ட்ரா மாடலில் குவாட்-கேமரா அமைப்பை தான் பயன்படுத்தியது.

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் 50MP ப்ரைமரி வைட்-ஆங்கிள் கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ், 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா இருந்தன. இதேபோன்ற கேமராக்களை நாம் ஷாவ்மீ 18 அல்ட்ரா மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Good News Xiaomi 18 Ultra to Pack New Quad Rear Camera and Launching Soon in December 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X