கொம்பன் இறங்கிட்டான்.. 9020mAh பேட்டரி, 90W சார்ஜிங், 5ஜி, 165Hz டிஸ்பிளே, 16GB ரேம்.. புது iQOO போன்!
ஐக்யூ (iQOO) நிறுவனமானது, கிட்டத்தட்ட மார்க்கெட்டில் உள்ள எல்லா பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களின் (Big Battery Smartphones) கதையையும் முடிக்க உள்ளது போல் தெரிகிறது. இந்நிறுவனம் ஒரு பெரிய 9020mAh பேட்டரியை கொண்ட புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.
அது ஐக்யூ இஸட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் ஆகும். ஐக்யூ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் சீன அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. கூடவே சில முக்கிய அம்சங்களையும் உறுதிப்படுத்தி உள்ளது. ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமான காரணத்தால், சீன அறிமுகத்தை தொடர்ந்து ஐக்யூ இஸட்11 இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஐக்யூ இஸட் 11 என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும். என்ன விலைக்கு வரும் கிஸ்மோசீனாவின் சமீபத்திய அறிக்கையின் படி, ஐக்யூ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் ஆன ஜிங் செங், ஐக்யூ நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு விழாவின் போது, ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் ஆனது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான கேமிங் டிஸ்பிளே மற்றும் ஒரு பெரிய 9,020mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று அறிவித்தார்.
இந்த அளவிலான பேட்டரி, ஐக்யூ ஸ்மார்ட்போனில் இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய பேட்டரி என்று என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த ஒரு லீக், ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.83-இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்றுபரிந்துரைக்கிறது
அதே டிப்ஸ்டர் வழியாக ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனின் 9020mAh பேட்டரி ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரலாம் என்றும் கூறுகிறார். மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 16GB ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்கள் குறித்த விவரங்கள் இல்லை/
அறிமுகத்தை பொறுத்தவரை ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் இந்த (மார்ச் 2026) மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஐக்யூ நிறுவனம் இன்னும் சரியான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, சீனாவில் அறிமுகம் ஆன பின்னர் இது இந்தியாவிற்கும் வரும்.
விலையை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 2,000 முதல் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.26,700) முதல் CNY 3,000 க்குள் (தோராயமாக ரூ.40,100 க்குள்) என்கிற விலை வரம்பில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை வெளியீட்டு நாளில் தான் தெரிய வரும்.
இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே
- 2392 x 1080 பிக்சல்ஸ்
- எச்டிஆர் 10 பிளஸ்
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம்
- 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- அட்ரெனோ 720 ஜிபியு உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்


Click it and Unblock the Notifications








