அறிமுகமானது புது HONOR 5ஜி போன்.. 7150mAh பேட்டரி.. 64எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் மேஜிக் வி6 (HONOR Magic V6) எனும் போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்
ஹானர் மேஜிக் வி6 அம்சங்கள் (HONOR Magic V6 Specifications): 7-95-இன்ச் போல்டபிள் ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் 6.52-இன்ச் அவுட்டர் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியும் உள்ளது. 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் விவிட், 6000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் புதிய ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.
மேஜிக்ஓஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி வைடு கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியாகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. டூயல் 5ஜி, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 6.0, கலிலியோ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் மேஜிக் வி6 போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)வசதி ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் 7150mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜி, 66W வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் இந்த புதிய ஹானர் போன் வெளிவந்துள்ளது.
சீனாலில் ஹானர் மேஜிக் வி6 போனின் ஆரம்ப விலை 8999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,20,220)-ஆக உள்ளது. வரும் மார்ச் 13-ம் தேதி இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








