இந்த Xiaomi போன் வாங்குனவங்க பாவம்யா.! இனிமேல் இந்த போன்களுக்கு சேவை கிடைக்காது.!

|

கம்மியான விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்.. வாங்குகிற ஸ்மார்ட்போனில் எல்லா புது அம்சங்கள் இருக்க வேண்டும்.. போனை வாங்கியதற்குப் பின் எதுவும் கோளாறு என்றால் நல்லபடியாக சர்வீஸ் செய்து தரவேண்டும்.. என்று இத்தனை எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை இந்தியாவில் அதிகம் கவர்ந்த நிறுவனம் தான் சியோமி (Xiaomi).!

சீனாவுக்கும் எங்களுக்கும் சண்டை.! ஆனா போன்னு வந்தா?

சீனாவுக்கும் எங்களுக்கும் சண்டை.! ஆனா போன்னு வந்தா?

என்னதான் இந்திய மக்கள் '' சீனாவுக்கும் எங்களுக்கும் சண்டை '' என்று வீர வசனம் பேசினாலும், இறுதியில் மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் சீன நிறுவன தயாரிப்பான சியோமி தயாரிப்புகளை தான் அதிகமாக வாங்குகிறார்கள்.

நாங்க சும்மா ஒன்னும் சொல்லவில்லை பாஸ், இந்தியாவில் இந்த 2022 ஆம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் (smartphone) பிராண்டுகளில் முதல் 3 இடங்களில் சியோமியின் தயாரிப்பு தான் இடம்பிடித்துள்ளது.

சியோமி தனது வாடிக்கையாளர்களை கைவிட்டுவிட்டதா?

சியோமி தனது வாடிக்கையாளர்களை கைவிட்டுவிட்டதா?

இந்தியாவில் அதிக யூனிட்களை விற்பனை செய்த நிறுவனமாகவும் சியோமி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கின் முடிவுகள் இதைத் தெரிவித்தாலும், சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏகபோக லாபத்தை ஈட்டியிருந்தாலும், அதன் தயாரிப்புகளில் இருந்து சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கிய வாடிக்கையாளர்களை மட்டும் நிறுவனம் இப்போது கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.

OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போப்பா வெளியவிடுவீங்க.!OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போப்பா வெளியவிடுவீங்க.!

இனி 'இந்த' போன்களுக்கு 'இந்த' சேவை கிடையாதா?

இனி 'இந்த' போன்களுக்கு 'இந்த' சேவை கிடையாதா?

ஆம், இனி நிறுவனம் குறிப்பிட்டுள்ள சில ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் (Xiaomi software update) கிடைக்காது என்று சியோமி அறிவித்துள்ளது.

இனி இவர்களுக்கு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் (security patch update) கிடைக்காது. அதேபோல, இனி இவர்களுக்கென்று எந்த ஒரு அப்டேட்டையும் நிறுவனம் வெளியிடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சியோமி வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும் போன் மாடல்களை நீங்களும் வைத்துள்ளீர்களா என்று உடனே செக் செய்யுங்கள்.

Xiaomi-யின் EOS பட்டியல் அப்டேட்.!

Xiaomi-யின் EOS பட்டியல் அப்டேட்.!

Xiaomi அதன் EOS பட்டியலை இப்போது புதுப்பித்துள்ளது. அதாவது, சியோமி நிறுவனம் அதன் EOS பட்டியல் விபரங்களை அப்டேட் செய்துள்ளது. இதில் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களைச் சேர்த்துள்ளது.

அதாவது சில Redmi மற்றும் Poco போன்களுக்கான சாப்ட்வேர் ஆதரவை நிறுவனம் இப்போது முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்பதே இதற்கான அர்த்தமாகும்.

1000+ வாட்ச் பேஸ்.. கெத்தான லுக்குடன் களமிறங்கிய Diesel Griffed Gen 6.! ரேட் என்ன தெரியுமா?1000+ வாட்ச் பேஸ்.. கெத்தான லுக்குடன் களமிறங்கிய Diesel Griffed Gen 6.! ரேட் என்ன தெரியுமா?

உங்ககிட்ட இந்த போன்கள் இருக்கிறதா? அப்போ இனி சேவை கட்.!

உங்ககிட்ட இந்த போன்கள் இருக்கிறதா? அப்போ இனி சேவை கட்.!

EOS பட்டியலைப் பார்க்கும்போது, ​​சீன தொழில்நுட்ப நிறுவனம் அதன் தயாரிப்பு பட்டியலில் இருக்கும் Redmi 8, Redmi 8A, Redmi K30 5G மற்றும் POCO X2 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான சாப்ட்வேர் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வருகிறது.

தெரியாதவர்களுக்கு, EOS பட்டியல் அடிப்படையில் உங்கள் சாதனம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவின் முடிவை எட்டியுள்ளது என்பதைக் குறிக்கிறது.

இந்த சியோமி ஸ்மார்ட்போன்கள் கலவாதியானது.!

இந்த சியோமி ஸ்மார்ட்போன்கள் கலவாதியானது.!

இதன் பொருள், மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்கள் காலாவதியாகி, பாதுகாப்பு இணைப்பு புதுப்பிப்புகளை இனி பெறாதது என்பதை வலியுறுத்துகிறது.

பாதுகாப்பு இணைப்பு அப்டேட் எனப்படும் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் உங்கள் சாதனத்திற்கு கிடைக்கவில்லை என்றால் வைரஸ் மற்றும் மால்வேர் போன்ற தீங்கிழைக்கும் ஆபத்துகளுக்கு உங்கள் டிவைஸ் ஆளாக்கப்படலாம்.

பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?

இதில் இருந்து தப்பிக்க என்ன வழி?

இதில் இருந்து தப்பிக்க என்ன வழி?

இதில் இருந்து தப்பிக்க எதுவும் வழி உள்ளதா என்றால், இந்த நேரத்தில், உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக புதிய மாடலுக்கு மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

ஆம், பாதுகாப்பு பற்றிய கவலை உங்களுக்கு எழுந்தால், நீங்கள் வேறு ஒரு புதிய சாதனத்தை தான் வாங்க வேண்டும்.

நேற்றைய நிலவரப்படி, POCO X2, Redmi K30, Redmi K30 5G, Redmi 8 மற்றும் Redmi 8A ஆகியவை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MIUI 13 அப்டேட் கிடைக்குமா? கிடைக்காதா?

MIUI 13 அப்டேட் கிடைக்குமா? கிடைக்காதா?

இனி இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு Xiaomi இலிருந்து எந்த வகையான மென்பொருள் ஆதரவையும் கிடைக்காது.

பல POCO X2 பயனர்கள் MIUI 13 புதுப்பிப்புக்காகக் காத்திருந்தாலும், இனி அது பயனளிக்காது என்பதே உண்மையாகும்.

தெரியாதவர்களுக்கு, நிலையான MIUI 13 உருவாக்கம் ஏப்ரல் 2022 இல் இந்த மொபைலில் சோதிக்கப்பட்டது, இருப்பினும் பல்வேறு பிழைகள் மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக நிறுவனம் இந்த புதுப்பிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாருயா சொன்னா நல்ல போன கம்மி விலைல வாங்க முடியாதுனு.! Redmi Note 12 5G பாருங்க.!யாருயா சொன்னா நல்ல போன கம்மி விலைல வாங்க முடியாதுனு.! Redmi Note 12 5G பாருங்க.!

ஸ்மார்ட்போனிற்கு அப்டேட் கிடைக்கவில்லை என்றால் ஆபத்தா? பாதிப்பு ஏற்படுமா?

ஸ்மார்ட்போனிற்கு அப்டேட் கிடைக்கவில்லை என்றால் ஆபத்தா? பாதிப்பு ஏற்படுமா?

எனவே, பாதுகாப்பு அபாயத்திற்கு ஆளாகாத, புதுப்பித்த ஸ்மார்ட்போன் மாடலைப் பெற விரும்புவோருக்கு, புதிய போனை வாங்குவது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்.

மேற்கூறிய ஸ்மார்ட்போன்கள் உடனடியாக ஆபத்தில் உள்ளன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

ஆனால், காலப்போக்கில் பிராண்டால் ஆதரிக்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களை விட மிகவும் அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என்பதே இதற்கான அர்த்தமாகும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Ends Software Support For Redmi 8 8A K30 5G and POCO X2 Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X