Home
Mobile

Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. 100W சார்ஜிங், 8000mAh பேட்டரி, 200MP ட்ரிபிள் கேமரா.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரீஸில் ஏற்கனவே ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 ப்ரோ, ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா உட்பட நான்கு மாடல்களை கொண்டுள்ளது. இதற்கிடையில் ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) என்கிற ஒரு புதிய மாடல் பற்றிய தகவல்கள் "மீண்டும்" வெளிவந்துள்ளது.

ஆக ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 17 சீரீஸை இன்னும் முழுமையாக அறிமுகம் செய்து முடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. ஆரம்பத்தில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷாவ்மீ 17 மேக்ஸ் மாடலை பற்றி வதந்திகள் வெளியாகி இருந்தன. இப்போது அதன் வெளியீடு குறித்த விவரங்கள் மீண்டும் வெளிவந்துள்ளன.

Xiaomi-யின் புது சிங்கக்குட்டி.. 100W சார்ஜிங், 8000mAh பேட்டரி!

ஷாவ்மீ 17 மேக்ஸ் எப்போது அறிமுகமாகும்? எக்ஸ் (X) தளம் வழியாக, டிப்ஸ்டர் கார்த்திகேய சிங் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லீக் உண்மையாக இருந்தால், இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான அறிமுகமாகும்.

வழக்கமாக "ப்ரோ" மாடல்கள் தான் இந்திய சந்தைக்கு வராது என்பதால், சீன அறிமுகத்தை தொடர்ந்து புதிய மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் இதுகுறித்து ஷாவ்மீ நிறுவனத்திடம் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும்வரவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கலாம்.

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட கூடிய ஒரு பெரிய 6.9 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சியோமி 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களில் உள்ள அதே ஸ்க்ரீன் சைஸ் ஆகும்

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 8000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இதில் 200MP முதன்மை, 50MP அல்ட்ரா-வைடு மற்றும் 50MP பெரிஸ்கோப் லென்ஸ் கொண்ட ட்ரிபிள்-கேமரா செட்டப் இடம்பெறலாம்.

முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் CrystalRes OLED டிஸ்பிளே
- 2656 x 1220 ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 3500 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ்
- DCI-P3 கலர் கவரேஜ்
- 12-பிட் கலர் டெப்த்

- HDR10+ மற்றும் Dolby Vision ஆதரவு
- லோ ப்ளூ லைட், ஃப்ளிக்கர் இல்லாத செயல்பாடு மற்றும் சர்க்காடியன்-பிரெண்ட்லி வியூக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்கள்
- 3என்எம் ஸ்னாப்டிராகன்8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரேனோ ஜிபியு மற்றும் குவால்காம் ஏஐ எஞ்சின்
- 16GB வரை LPDDR5x ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- 3D ஐஸ்லூப் கூலிங் சிஸ்டம்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஷாவ்மீ ஹைப்பர் ஓஎஸ் 3
- ஷாவ்மீயின் புதிய HyperAI தொகுப்பின் கீழ் கிடைக்கும் ஏஐ அம்சங்கள்
- Summilux லென்ஸ்களுடன் கூடிய Leica-வால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1/1.31-இன்ச் லைட் ஃப்யூஷன் 950 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா

- 60mm ஃபோகல் லென்த் மற்றும் OIS கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 102-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் செல்பீ கேமரா
- 30fps இல் 8K வீடியோ ரெக்கார்ட், 60fps இல் 4K ரெக்கார்ட் ஆதரவு
- டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- AI அடிப்படையிலான ஃபேஸ் அன்லாக் ஆதரவு
- 6330mAh பேட்டரி
- 100W வயர்டு ஹைப்பர்சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் ஹைப்பர்சார்ஜ் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Max Reportedly Launching in May 2026 Major Specifications leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X