Home
Mobile

மிரட்டிவிட்டாப்ல.. பட்ஜெட்ல 9020mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 120FPS கேமிங்.. புது Vivo போன்.. எந்த மாடல்?

விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. கூடுதலாக பட்ஜெட் விவரங்கள் வெளியாகி விவோ பிரியர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மார்கெட்டையும் மிரளவிட்டுள்ளது. இந்த விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு, பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிளிப்கார்ட் விற்பனையும் உறுதியாகி இருக்கிறது.

மிரட்டிவிட்டாப்ல.. பட்ஜெட்ல 9020mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

மேலும், 9020mAh பேட்டரி மற்றும் 120FPS கேமிங் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதும் பிளிப்கார்ட்டின் மைக்ரோசைட்டில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களுடன் மார்கெட்டில் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. இதை பார்ப்போம்.

விவோ டி5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T5 Pro 5G Specifications): 120FPS கேமிங் மட்டுமல்லாமல், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கிடைக்க உள்ளது.

9020mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்க உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டிசைனை பார்க்கையில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருப்பது தெரிகிறது. ஆகவே, விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்த கேமராவை பார்க்க முடிகிறது.

ஆகவே, இந்த ஸ்மார்ட்போனில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும், இந்த நேரத்தில் விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. விவோ டி4 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது.

இதே பட்ஜெட்டில் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனையும் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பிளிப்கார்ட் தளத்திலேயே இந்த பட்ஜெட் செக்மெண்ட் குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த பட்ஜெட்டானது, அறிமுக சலுகைகள் போக கிடைக்கிறதா அல்லது ஆரம்ப விலையாக இருக்கிறதா என்பது விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி பிறகே தெரியவரும்.

விவோ டி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T4 Pro 5G Specifications): 6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதே சிப்செட்டை விவோ டி5 ப்ரோ 5ஜி கொடுக்க இருக்கப்பதாக கூறப்படுகிறது.

சோனி சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7300mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, பேட்டரி கேபாசிட்டியை விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அதிகரித்துள்ளது. மற்ற பீச்சர்களில் பெரிய மாற்றம் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T5 Pro 5G With 9020mAh Battery 120FPS Gaming Launch in India Confirmed Check Price Range
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X