Home
Mobile

ஏப்.13 குறிச்சாச்சு.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Active Matrix Display) கொண்ட மாடலாக இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மற்றும் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் இன்பினிக்ஸ் இந்தியா தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த டிஸ்பிளே ரியர் கேமரா பம்ப்பில் இடம்பெற்றிருக்கும்.

ஏப்.13 குறிச்சாச்சு.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

அதாவது, ஒயிட் டாட்களால் கட்டமைக்கப்பட்ட இமேஜ்களை நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ள முடியும். இதில் கால்கள், மேசேஜ் உள்ளிட்ட நோட்டிபிகேஷன்கள், பேட்டரி நோட்டிபிகேஷன்கள், மியூசிக் மற்றும் மினி கேம்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன. மற்ற பீச்சர்கள் உறுதியாகவில்லை.

இருப்பினும், குளோபல் மார்கெட்டில் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆகவே, அதில் கிடைத்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில், குளோபல் வெர்ஷனின் பீச்சர்கள் அப்படியே இந்திய வெர்ஷனில் இருந்துவந்திருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அம்சங்கள் (Infinix Note 60 Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை கொண்டுள்ளது. அட்ரினோ ஏ810 ஜிபியு (Adreno A810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எக்ஸ்ஓஎஸ் 6 (XOS 16) கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (1208 x 2644 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

2304Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 13 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஏஐ கேம் (AI Cam), போர்ட்ராய்டு (Portrait) பீச்சர்கள் உள்ளன.

மேலும், சூப்பர் நைட் (Super Night), டூயல் வீடியோ (Dual Video), சூப்பர் மேக்ரோ (Super Macro) மற்றும் ஸ்ட்ரீட் ஸ்னாப் (Street Snap) ஆகிய பீச்சர்களும் உள்ளன. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

3டி ஐஸ்கோர் விசி சேம்பர் கூலிங் (3D IceCore VC Chamber Cooling) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In-Display Fingerprint), எக்ஸ்-ஆக்சிஸ் மேட்டார் (X Axis Motor) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களை இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro With Active Matrix Display to Launch in India on April 13 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X