OPPO சம்பவம் ரெடி.. 8000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களான ஓப்போ கே15 ப்ரோ (OPPO K15 Pro) மற்றும் ஓப்போ கே15 ப்ரோ+ (OPPO K15 Pro+) ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பது தெரிய வந்துள்ளது. சீன வெர்ஷனில் கிடைத்த அதே பீச்சர்களுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல எப்போது வெளியாகும் என்ற விவரங்களும் கசிந்துள்ளன.
சீன மார்கெட்டில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஓப்போ கே15 ப்ரோ மற்றும் ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போன்கள் வெளியாகின. ஏப்ரல் 3ஆம் தேதி விற்பனை தொடங்கிவிட்டது. குளோபல் மற்றும் இந்திய வெளியீட்டுக்கு ஓப்போ பிரியர்கள் காத்திருக்கின்றனர். ஏனென்றால், 8000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎஸ்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வெளியாகின.

இப்போது, சீனாவில் அதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டிலும் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல 2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை டிப்ஸ்டர் தேபயன் ராய் (Debayan Roy) அவரது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளார். ஆகவே, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ஓப்போ கே14 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இப்போது, ஓப்போ கே15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் கிடைக்க இருப்பதும் தெரியவந்துள்ளதால், ஓப்போ பிரியர்கள் படுகுஷியில் இருக்கின்றனர். ஏனென்றால், கேமிங் பிரியர்கள் எதிர்பார்க்கும் அதிக பேட்டரி கேபாசிட்டி மற்றும் பர்ஃபாமென்ஸ் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஓப்போ கே15 ப்ரோ அம்சங்கள் (OPPO K15 Pro Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா டைமன்சிட்டி 8500 சூப்பர் 4என்எம் (Octa Core Dimensity 8500 SUPER 4nm) சிப்செட் கிடைக்கிறது.
கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7500mAh பேட்டரி கிடைக்கிறது. IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. சீன மார்கெட்டில் ரூ.43,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஓப்போ கே15 ப்ரோ+ அம்சங்கள் (OPPO K15 Pro+ Specifications): 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 330Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்து உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் (Octa Core Dimensity 9500s 3nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளது.
முந்தைய மாடலில் கிடைத்த அதே கேமரா சிஸ்டம் உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. IP69 ரேட்டிங் கிடைக்கிறது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. ரூ.47,000 பட்ஜெட்டில் சீன மார்கெட்டில் கிடைக்கிறது. இதே பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








