தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.14,550 போதும்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் லாவா பிளே மேக்ஸ் 5ஜி (Lava Play Max 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 12 ஜிபி ரேம், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த லாவா பிளே மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கேமிங் பிரியர்களுக்கான பட்ஜெட் விலை மாடலாக இருப்பதால், 1700 எம்எம் விசி கூலிங் டெக்னாலஜி (VC Cooling Technology) கிடைக்கிறது. டிசைனும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. ரெட்மேஜிக் ஸ்மார்ட்போன்களின் டிசைனை இதில் பார்க்க முடிகிறது. இப்போது, அமேசான் தளத்தில் 6 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.449 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,550 விலைக்கு இந்த லாவா பிளே மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரூ.14,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. டிசைன் மட்டுமல்லாமல், பீச்சர்களிலும் பட்ஜெட் பிரியர்களை மிரளவிடுகிறது.
டெக்கான் பிளாக் (Deccan Black) மற்றும் இமாலயன் ஒயிட் (Himalayan Whit) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் இமாலயன் ஒயிட் மாடலின் பேக் பேனல் பிளைன் ஒயிட் மட்டுமே கிடைக்கும். ஆனால், டெக்கான் பிளாக் மாடலின் பேக் பேனலில் கேமிங் டிசைனுக்கான லைன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
லாவா பிளே மேக்ஸ் 5ஜி அம்சங்கள் (Lava Play Max 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட்டை இந்த லாவா பிளே மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 700 எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 8 ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், நைட் மோட், போர்ட்ராய்டு மோட் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த லாவா பிளே மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 1700 எம்எம் விசி கூலிங் டெக்னாலஜி கிடைக்கிறது.
ஹீட் கன்ட்ரோல் கொடுக்க இந்த டெக்னாலஜி வருகிறது. இந்த பேட்டரியுடன் 8.4 எம்எம் தடிமன் மற்றும் 193 எடை கிடைக்கிறது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








