Home
Mobile

OPPO போட்ட போடு.. 200MP கேமரா.. 7025mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ (OPPO Find X9s Pro) ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே கசிந்துள்ளன. ஏற்கனவே, கேமரா, பேட்டரி, டிஸ்பிளே மற்றும் சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்தன. இப்போது, கலர் விவரங்கள் கசிந்து, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. சீன மார்கெட்டில் முதலில் வெளியாக உள்ளன. பிறகு இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோவின் கலர் ஆப்ஷன்கள் கசிந்துள்ளன.

OPPO போட்ட போடு.. 200MP கேமரா.. 7025mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

Weibo வழியாக கலர் ஆப்ஷன்கள் கசிந்துள்ளன. இதில் நேச்சுரல் ஒயிட் (Natural White), நேட்டிவ் டைட்டானியம் (Native Titanium), வைப்ரென்ட் ஆரஞ்ச் (Vibrant Orange), விண்ட் சேஸர் கிரீன் (Wind Chaser Green) ஆகிய கலர்கள் உள்ளன. இதேபோல ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவின் கலரும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோவின் பீச்சர்களை பார்க்கலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ அம்சங்கள் (OPPO Find X9s Pro Specifications): 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.32 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

7025mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 198 கிராம் எடை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட்டை கொடுக்க உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க உள்ளது.

இந்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மட்டுமேயாகும். டூயல் 200 எம்பி கேமரா செட்டப்பை ஓப்போ நிறுவனமே உறுதி செய்துள்ளது. இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. ஆகவே, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனையும் எதிர்பார்க்கலாம்.

சொல்ப்போனால், இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. கேமராவை பார்க்கையில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

2 எம்பி மல்டி-ஸ்பெக்ட்ரல் லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ மேக்ரோ சப்போர்ட் கிடைக்கிறது. 120X டிஜிட்டல் ஜூமிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 7500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

இந்த பீச்சர்களுடன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999 ஆக இருக்கிறது. இதே பட்ஜெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடலை எதிர்பார்க்கலாம். கேமராவில் மட்டும் அப்கிரேட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவில் துன்ட்ரா, வெல்வெட் சாண்ட் கேன்யான், போலார் கிளாசியர் கலர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9s Pro Colour Options Leaked Ahead of April 21 Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X