அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!

|

அமேசான் நிறுவனத்தில் வேலை, வீட்டில் இருந்தே வருமானம் என பல வழிகளில் மோசடி செய்த கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் இதுவரை என்னவெல்லாம் செய்தது, எப்படி சிக்கியது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆன்லைன் மோசடி கும்பல்

அமேசானில் வேலை, வீட்டில் இருந்த வருமானம் போன்ற தகவலை நீங்கள் பெற்றால் அதை உடனே புறக்கணித்துவிடுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 11,000 பேரை ஏமாற்றியதாகக் கூறப்படும் சைபர் குற்றவாளிகளின், சர்வதேச கும்பலை சேர்ந்தவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? கொத்தாக தூக்கிய போலீஸ்!

அதிகரிக்கும் இணைய மோசடிகள்

இந்த சைபர் மோசடி கும்பல் சீனா, துபாய்யை மையமாகக் கொண்டிருக்கிறது எனவும் இந்த குழுவின் மையம் ஜார்ஜியாவில் இருந்து இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இணைய மோசடியில் தொடர்புடைய மூன்று பேரை டெல்லி போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

இதுகுறித்து IANS இல் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மோசடி தொடர்பாக டெல்லி, குருகிராம் மற்றும் ஹரியானா ஆகிய இடங்களில் தனித்தனியாக காவல்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமேசான் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் குறித்து ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூ.1.18 லட்சம் மோசடி செய்ததாக புகார்

காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக IANS இல் வெளியாகி உள்ள தகவலின்படி, அமேசான் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகவும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் எனவும் கூறி ஒரு கும்பல் ரூ.1.18 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் டெல்லி போலீஸாரிடம் புகார் அளித்தார். இதன் உண்மைத் தன்மையை அறிந்த போலீஸார் இதுகுறித்து மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

மோசடி கும்பல் குறித்த தகவல்

மோசடி செய்பவர்கள் டெலிகிராம் ஐடியை பயன்படுத்தி ஏமாற்றி வருவது கண்டறியப்பட்டது. இந்த ஐடி ஆனது சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அமேசான் தளத்தில் முதலீடு செய்யச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் எண் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? கொத்தாக தூக்கிய போலீஸ்!

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணம்

பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், ஒரே நாளில் ரூ.5.17 கோடி அந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

அசல் போன்று உருவாக்கப்படும் போலி தளம்

மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்படும் இணையதளங்கள் அசல் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அமேசான் இணையதளம் போல் காட்சியளிக்கும் தளத்தை உருவாக்கி இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. பெரும்பாலான சமூகவலைதளங்களில் இந்த மோசடி விளம்பரங்கள் பரவி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி எப்படி நடக்கிறது தெரியுமா?

இந்த கும்பல் கடந்த சில மாதங்களில் மட்டும் 11,000 பேர் வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது என பார்க்கலாம். பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சர்வதேச எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது, அந்த லிங்கில் தன்னை அமேசான் நிர்வாகியாகக் காட்டி கொண்ட நபர் ஒருவர் அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் தொடர்பு விவரங்கள் naukri.com மற்றும் Shine.com போன்ற தளங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலியாக உருவாக்கப்படும் வேலைகள்

மென்பொருள் உருவாக்குநர்களின் உதவியுடன் மோசடி செய்பவர்களால் போலியான அமேசான் இணையதளம் உருவாக்கி பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மோசடியில் பலருக்கு போலியாக வேலைகள் உருவாக்கி அதை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? கொத்தாக தூக்கிய போலீஸ்!

virtual wallet உருவாக்கி திருடப்படும் பணம்

போலியாக வேலையை உருவாக்கி அதில் ஒரு virtual wallet உருவாக்கப்படுகிறது. ஊதியப் பணம் வாலட் இல் வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வாலட்டில் முதலீடு பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தப்படுகிறது. பின் இந்த வாலட் இல் இருக்கும் அனைத்து பணமும் திருடப்படுகிறது. வேலை தொடர்பாக நடத்தப்படும் பல மோசடியில் இதுவும் ஒரு வழிமுறை ஆகும்.

நேர்காணல் விதிமுறைகள் அறிந்திருப்பது அவசியம்

ஒரு பணிக்கான செயல்முறை என்பது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்திருப்பது மிக அவசியம். அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்சார்ந்த முறையில் ஒரு செய்தியை அனுப்பவோ அல்லது வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்யும்படி கேட்கவோ மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்மை தன்மையை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு நிறுவனங்களில் நேர்காணல்களை மேற்கொள்வதற்கு பல சுற்றுகள் இருக்கிறது. நிறைய விஷயங்களுக்கு HR உடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஏதேனும் வேலை வாய்ப்பு குறித்த சந்தேகம் ஏற்பட்டால், அதை உங்களுக்கு நம்பும்படியான நபர்களுடன் பகிர்ந்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Work at Amazon, Earn from Home?Woman Lost Over Rs.1.18 Lakh through Amazon Job Scam

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X