Instagram மூலம் வேலைக்கு விண்ணப்பித்த பெண்: நூதன முறையில் பொங்கல் வைத்த மோசடி குழு!

|

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களை இணைக்கும் தளமாக மட்டும் இருந்த சமூகவலைதளம் இப்போது மெய்நிகர் மையங்களாகவும், மார்க்கெட்டிங் வணிகங்களை அணுகுவதற்கான தளமாகவும், வேலைகளை கண்டறியும் தளமாகவும் விளங்கி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்கள் இந்த செயல்களில் சிறந்து விளங்குகிறது.

மோசடி கும்பல் விரிக்கும் வலைகள்

மோசடி கும்பல் விரிக்கும் வலைகள்

டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம் அதேபோல் இந்த டிஜிட்டல் யுகத்திலும் இருக்க வேண்டும்.

சிறுக சிறுக சேமித்த பணம், உங்கள் முக்கிய புகைப்படம் வீடியோக்கள் என அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு வகையில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி

அதன்படி சமீபத்தில் சைபர் மோசடி வழக்கில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தாணேவை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஆன்லைன் மோசடி செய்பவரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார்.

ஓபன் ஆன மற்றொரு லிங்க்

ஓபன் ஆன மற்றொரு லிங்க்

PTI வெளியிட்ட தகவலின்படி, அந்த பெண் இன்ட்ஸ்டாகிராம் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேலை விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதை ஓபன் செய்து பார்க்க முயன்ற போது அதில் உள்ள லிங்க் அந்த பெண்ணை வேறு ஒரு இணையதளத்துக்கு அழைத்து சென்றுள்ளது. அதில் வேலையை பெறுவதற்கு சில கட்டணங்களை செலுத்தும் படி இணையதளம் அறிவுறுத்தி உள்ளது.

போலீஸார் விசாரணை

போலீஸார் விசாரணை

அந்த இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள அறிவுறுத்தல்படி, அந்த பெண் விவரங்களை பூர்த்தி செய்து இணையதளம் மூலமாக பணம் செலுத்தி உள்ளார். அந்த பெண் அடுத்த 6 நாட்களில் மொத்தம் ரூ.5,38,173 செலுத்தி உள்ளார் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பணம் அனுப்பிய பிறகும் அந்த பெண், வேலை வழங்குநரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

இந்த வழக்கின் மூலம் சைபர் மோசடி கும்பல் எப்படி பணத்தை திருட புதிய வழிகளை கண்டுபிடித்து வருகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மேலும் ஒருமுறை இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

Digital india

Digital india

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கை ஏறத்தாழ வெற்றி அடைந்து விட்டது என்றே கூறலாம். Digital india (2023) இல் வாழ்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆசை வார்த்தைகளில் சிக்கி வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். முதலில் எந்த ஒரு ஆதாரமற்ற தகவலையும் நம்பாமல் இருக்க வேண்டும்.

அதிகரிக்கும் மோசடி செயல்கள்

அதிகரிக்கும் மோசடி செயல்கள்

சற்று யோசித்து பாருங்கள் ஒரு விற்பனை தளமோ அல்லது ஏதேனும் ஒரு ஆன்லைன் தளமோ உங்களுக்கு மட்டும் தள்ளுபடியும் சலுகையும் வழங்க காரணம் என்ன? ஒரு தளம் சிறிய தள்ளுபடி வழங்கினாலே அது பெரியளவு செய்தி ஆகி விடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் மொபைல் நம்பரும், மெயில் ஐடியும் தேர்ந்தெடுத்து அதீத தள்ளுபடி வழங்க காரணம் என்ன? இதில் அவர்களுக்கு லாபம் என்ன? இவை அனைத்தும் மோசடி செயல்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

மேம்பட்டு வரும் மோசடி செயல்கள்

மேம்பட்டு வரும் மோசடி செயல்கள்

இதுபோன்ற சிக்கலில் நீங்கள் சிக்காமல் இருப்பதால் இப்படி எல்லாம் நடக்குமா என்ற கேள்வி வரலாம். ஆனால் நடந்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆன்லைன் மோசடியா என்று ஆச்சரியப்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது இணையவழி மோசடிகள் என்பது தினசரி செய்தியாக மாறிவிட்டது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் ஆன்லைன் மோசடிகள் செயல்படும் முறை என்பதும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது என்பது தான். எச்சரிக்கையாக இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

Best Mobiles in India

English summary
Woman Who Applied for Job through Instagram: Fraud Gang Cheated Rs.5 Lakh in a Sophisticated Way.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X