கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?

|

மாணவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என சாட்ஜிபிடி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக பெரும் பேசுபொருளாக இருக்கும் ChatGPT என்றால் என்ன தெரியுமா?

ChatGPT: 5 நாட்களில் 1 மில்லியன் டவுன்லோட்

ChatGPT அறிமுகம் செய்யப்பட்ட 5 நாட்களில் 1 மில்லியன் டவுன்லோடை பெற்றிருக்கிறது. ChatGPT என்ற வார்த்தையை புதிதாக கேள்விப்படும் பலரும் இந்த தகவல் மூலம் வியப்படையலாம். டெக் உலகில் சமீப காலமாக பெரும் பேசு பொருளாக சாட்ஜிபிடி மாறி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

'ChatGPT' என்றால் என்ன?  பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?

கூகுளுக்கு இணை மாற்றாக சாட்ஜிபிடி

ChatGPT பயன்பாட்டை கூகுள் கில்லர் எனவும் கூகுளுக்கு இணை மாற்று வந்து விட்டது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்கள் எது தொடர்பான கேள்வியை எழுப்பினாலும் சாட்ஜிபிடி அதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக பதிலளிக்கும்.

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI)

தொழில்நுட்ப உலகம் பல கட்டம் முன்னேற்றம் அடைந்து வருவதோடு மனித இனத்தையும் அதன் உடன் முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. அதன்படி மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்(AI) இருக்கிறது. சாட்ஜிபிடியும் இந்த தொழில்நுட்பம் தொடர்பான பயன்பாடுதான்.

ChatGPT என்றால் என்ன?

ChatGPT என்பது OpenAI மூலம் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட பயன்பாடு ஆகும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இது செயற்கை நுண்ணறிவு மூலம் விரைவாக பதில் சொல்லும். அதேபோல் சாட்ஜிபிடி மூலமாக மெயில்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதலாம். ChatGPT என்பது "ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்" என்ற தொழில்நுட்பத்தை குறிக்கிறது. எளிதாக இதன் பயன்பாட்டை கூற வேண்டும் என்றால், சாட்ஜிபிடி உடனான உரையாடல் ஒரு நிபுணரிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

'ChatGPT' என்றால் என்ன?  பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?

சாட்ஜிபிடி வளர்ச்சி

அறிமுகமாகி இரண்டு மாதங்களில் எந்த ஒரு பயன்பாடும் கண்டிராத வளர்ச்சியை சாட்ஜிபிடி கண்டிருக்கிறது. 1 மில்லியன் பதிவிறக்கம் பெற பிரபல பயன்பாடுகள் குறைந்தபட்சமாக எடுத்துக் கொண்ட நேரம் இதோ.

Netflix- 3.5 வருடம்

பேஸ்புக்- 10 மாதம்

ஸ்பாடிஃபை- 5 மாதம்

இன்ஸ்டாகிராம்-2.5 மாதம்

சாட்ஜிபிடி- 5 நாட்கள்

அதாவது சாட்ஜிபிடி இதுவரை பிற பயன்பாடுகள் படைத்த அனைத்து சாதனையையும் முறியடித்து இருக்கிறது.

ChatGPT தடை செய்ய காரணம் என்ன

தேர்வுகள், பணிகள் மற்றும் ஆய்வக சோதனைகளுக்கு AI கருவியை மாணவர்கள் பயன்படுத்தியை அடுத்து, பெங்களூரு பல்கலைக்கழகம் சாட்ஜிபிடிக்கு தடை விதித்துள்ளது.

நியூயார்க் நகரப் பள்ளிகள் மற்றும் நியூயார்க் பொதுப் பள்ளிகள் முன்னதாகவே சாட்ஜிபிடி பயன்பாட்டை தடை செய்தது. ChatGPT போன்ற ஏஐ கருவிகள் மாணவர்களின் விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றலை குறைக்கிறது போன்ற குற்றச்சாட்டுகள் தடைகளுக்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

'ChatGPT' என்றால் என்ன?  பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?

AI அடிப்படையிலான பயன்பாடுகள்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கைப்படி, பெங்களூரு பல்கலைக்கழகம் ChatGPT பயன்பாட்டை மட்டும் தடை செய்யவில்லை. GitHub கோ-பைலட், பிளாக் பாக்ஸ் போன்ற பிற AI அடிப்படையிலான கருவிகளையும் தடை செய்துள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் அல்லது ஆராய்ந்து முடிக்கும் தங்களது பணிகளை முடிக்க இதுபோன்ற ஏஐ பயன்பாட்டை பயன்படுத்தக் கூடும் என்பதால் தடை செய்துள்ளோம் என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் தடம் பதித்த ChatGPT

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் வளர்ந்து வரும் காலங்களில் இதுபோன்ற பயன்பாட்டை முழுமையாக தடை செய்வது என்பது இயலாத காரியம். ஆரம்பத்தில் இதுபோன்ற பயன்பாடுகள் விமர்சனங்களை பெறுவது என்பதும் சராசரியான ஒன்று. முறையாகவும் சரியாகவும் அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வது பெரிதும் பேருதவியாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Whats is ChatGPT? What is the reason for banning ChatGPT?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X