Home
News

ஒவ்வொரு இந்தியரும் Gmail அக்கவுண்ட்டில் இந்த வசதியை தெரிஞ்சுக்கணும்.. இனி சிக்கல் இருக்காது.. ஏன்?

இந்தியாவில் முழுவதும் பல கோடி மக்கள் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது புதிய போன் வாங்குவது முதல் ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட் வரை இந்த ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படுகிறது.

அதுவும் மாணவர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன.

ஒவ்வொரு இந்தியரும் Gmail அக்கவுண்ட்டில் இந்த வசதியை தெரிஞ்சுக்கணும்..

குறிப்பாக ஜிமெயில் சேவையில் பாதுகாப்பு வசதியிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் இப்போது ஜிமெயில் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதில் Recovery Phone Number ஆப்ஷன் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த ஆப்ஷன் மூலம் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது யாராவது உங்கள் கணக்கை அனுமதியின்றி அணுக முயன்றாலோ, இந்த எண் (Recovery Phone Number) மூலம் மிகவும் எளிமையாகக் கணக்கை மீட்டெடுக்க முடியும். சரி இதற்கான வழிமுறைகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1. முதலில் நீங்கள் myaccount.google.com பகுதிக்குச் செல்ல வேண்டும். அடுத்து உங்கள் முகவரியில் லாகின் செய்யவும்

2. இப்போது மெனுவில் Security and sign-in எனும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அதன்பின்னர் Recovery phone எனும் ஆப்ஷனை என்பதை தேர்வு செய்யவும்.

3. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் மீண்டும் உங்கள் பாஸ்வேர்டு கேட்கும். பின்னர் Add recovery phone என்பதில் நீங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

4.அதைத்தொடர்ந்து Get code என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP வரும். அதை உள்ளிட்ட உள்ளிட்டு Verify செய்யவும்.

குறிப்பாக இந்த பாதுகாப்பு வசதியின் மூலம் நீங்கள் பாஸ்வேர்டு மறந்தாலோ அல்லது உங்கள் அனுமதியின்றி வேறு யாராவது லாக்-இன் செய்ய முயற்சி செய்தாலோ, கூகுள் உடனடியாக தகவல் தெரிவிக்கும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளால் கணக்கு முடக்கப்பட்டால் அதை இந்த வசதியின் மூலம் எளிதாக மீட்டெடுக்கலாம். இது உங்கள் கணக்கிற்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு இந்தியரும் Gmail அக்கவுண்ட்டில் இந்த வசதியை தெரிஞ்சுக்கணும்..

நீங்கள் அதே செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் 2-Step Verification வசதியையும் ஆன் செய்து கொள்ளலாம். குறிப்பாக இது உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். ஒருவேளை யாராவது உங்கள் கடவுச்சொல்லைத் தெரிந்து வைத்திருந்தாலும், உங்கள் மொபைல் போன் இல்லாமல் அவர்களால் உங்கள் கணக்கிற்குள் நுழைய முடியாது.

இப்போது ஹேக்கர்கள் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஜிமெயில் உள்ள விவரங்களைத் திருட தொடர்ந்து புதிய புதிய திருட்டு வழிகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே உங்கள் கணக்கு முடக்கப்பட்ட பிறகு வருந்துவதை விட இப்போதே சில நிமிடங்கள் ஒதுக்கி ஜிமெயில் சேவையில் பாதுகாப்புமுறைகளைச் செய்து தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் நல்லது. மேலும் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சேவையில் வரும் ஒவ்வொரு வசதியும் மிகவும் பயனுள்ள வகையிலும், பாதுகாப்பாகவும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How a Recovery Phone Number Can Keep Your Gmail Account Secure: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X