WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?

|

WhatsApp என்பது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு வசதியான மெசேஜ்ஜிங் தளமாகும். இது, அதன் பயனர்களை மெசேஜ் அனுப்ப, புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள, இணைப்புகளை இணைக்க மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. உலகத்தில் உள்ள பெரும்பாலான எண்ணிக்கையிலான பயனர்கள் பயன்படுத்தும் இந்த இயங்குதளமானது பல்வேறு விதமான ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளை கூட ஆதரிக்கிறது. இப்போது, இதன் சமீபத்திய அப்டேட் மூலம், மெசேஜ்களுக்கு ரியாக்ஷன் அனுப்பவும் அனுமதிக்கிறது. இதுபோல, இன்னும் பல அம்சங்கள் இதில் உள்ளது.

வாட்ஸ்அப் இல் கிடைக்கும் சிறப்பான விஷயங்கள்

வாட்ஸ்அப் இல் கிடைக்கும் சிறப்பான விஷயங்கள்

வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஆடியோ / விஷுவல் செய்திகளை பதிவு செய்து அனுப்பவும் இந்த தளம் அனுமதிக்கிறது. கூடுதலாக, பிளாட்ஃபார்மில் உள்ள மற்றொரு சிறப்பான விஷயம் என்றால் அது லொகேஷன் ஷேரிங் அம்சம் தான். இது அந்த பயனர் இருக்கும் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்குகிறது.
இது வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இருப்பினும், நீங்கள் லொகேஷன் ஷேர் செய்ய விரும்பும் போது, ஒரு குழப்பம் ஏற்படுகிறது. காரணம், லொகேஷன் ஷேரிங் விருப்பம் இரண்டு முறைகளில் வருகிறது.

Live லொகேஷன் ஷேரிங் மற்றும் Current லொகேஷன் ஷேரிங்

Live லொகேஷன் ஷேரிங் மற்றும் Current லொகேஷன் ஷேரிங்

இதில் ஒன்று Live லொகேஷன் ஷேரிங் அம்சமாகும். மற்றொன்று Current லொகேஷன் ஷேரிங் அம்சமாகும். இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அடிப்படை வேலையைத் தான் செய்கிறது என்றாலும் கூட, இவற்றிற்கு இடையில் ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. இதனால், முதியவர்கள் மற்றும் இன்னும் சிலர் குழப்பத்திற்குள்ளாகிறார்கள். உண்மையில் லைவ் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன? அது என்ன செய்யும்? கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன? அது என்ன செய்யும்? என்ற வித்தியாசத்துடன் இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

வாட்ஸ்அப் இல் எப்படி லொகேஷன் ஷேர் செய்வது?

வாட்ஸ்அப் இல் எப்படி லொகேஷன் ஷேர் செய்வது?

தற்போதைய இருப்பிடம் (கரண்ட் லொகேஷன்) மற்றும் நேரலை இருப்பிட (லைவ் லொகேஷன்) அம்சங்களைப் பயன்படுத்தி, பயனர்கள் அவர்களின் வாட்ஸ்அப்பில் உள்ள பிற பயனர்களுடன் தங்கள் இருப்பிடத் தகவலைப் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. லைவ் மற்றும் கரண்ட் இருப்பிடம் மற்றும் வாட்ஸ்அப்பில் இருப்பிடத்தைப் பகிர்வது எப்படி என்ற மூன்று செயல்முறைகள் பற்றி மேலும் அறியத் தொடர்ந்து படியுங்கள். வாட்ஸ்அப் இல் இருந்து லொகேஷன் ஷேர் செய்ய தெரியாத புதியவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக அமையும்.

வாட்ஸ்அப்பில் Current location மற்றும் Live location இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

வாட்ஸ்அப்பில் Current location மற்றும் Live location இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் தளமானது பயனர்கள் தங்கள் இருப்பிடத்தை இரண்டு வடிவங்களில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. பயனர்கள் தங்களின் தற்போதைய இருப்பிடத்தைப் பகிரலாம் அல்லது அவர்களின் நேரலை இருப்பிடத்தைக் குறிப்பிட்ட நேரம் வரை பகிரலாம். இருப்பினும், இந்த விருப்பங்கள் பெரும்பாலும் பயனர்களைக் குழப்புகின்றது. வாட்ஸ்அப்பில் வரும் கரண்ட் லொகேஷன் ஷேரிங், பயனரின் தற்போதைய இருப்பிடத்தை மட்டும் அந்நேரத்தில் மட்டும் பகிரும்.

மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?

எவ்வளவு மணி நேரம் லொகேஷன் ஷேரிங் செயல்படும்?

எவ்வளவு மணி நேரம் லொகேஷன் ஷேரிங் செயல்படும்?

இருப்பினும், லைவ் லொகேஷன் இது போல் இல்லாமல், ஒரு நேரலை இருப்பிடத் தகவலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பகிரும். இந்த குறிப்பிட்ட நேரம் என்பது 15 நிமிடம் முதல் 8 மணி நேரம் வரை செயல்படக்கூடியது. இந்த காலத்திற்குள் பயனர் செல்லும் அனைத்து இடங்களையும் லைவ் லொகேஷன் காண்பிக்கும். இப்போது, இந்த இரண்டு அம்சத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிந்துகொண்டோம். இப்போது வாட்ஸ்அப்பில் இருந்து உங்கள் லொகேஷனை எப்படி ஷேர் செய்வது என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் இருப்பிடத்தைப் பகிர்வது எப்படி?

வாட்ஸ்அப்பில் இருப்பிடத்தைப் பகிர்வது எப்படி?

  • உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் Location இயக்கவும்.
  • வாட்ஸ்அப்பைத் திறந்து, இருப்பிடத்தைப் பகிர வேண்டிய அரட்டை அல்லது குழுவை உள்ளிடவும்.
  • டிஸ்பிளேயின் கீழே, '+' அல்லது காகித கிளிப் ஐகானைத் தட்டவும்.
  • திறக்கும் மெனுவில், 'Location' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • திறக்கும் மெனுவில், பயனர்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு ரிசீவருடன் கிடைக்கும் தங்களுடைய நேரலை இருப்பிடத்தைப் பகிரலாம்.
  • சந்திர கிரகணம் 2022: இரத்த நிலவாக காட்சி தரப்போகும் 'Blood moon' நிகழ்வு.. எப்போது வானில் பார்க்கலாம்?சந்திர கிரகணம் 2022: இரத்த நிலவாக காட்சி தரப்போகும் 'Blood moon' நிகழ்வு.. எப்போது வானில் பார்க்கலாம்?

    லொகேஷன் ஷேரிங் அம்சத்தை நிறுத்துவது எப்படி?

    லொகேஷன் ஷேரிங் அம்சத்தை நிறுத்துவது எப்படி?

    அது அவர்களின் இருப்பிடத்தை ஒருமுறை பகிரும்.
    தேர்ந்தெடுக்கப்பட்டதும், பயனர்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள பச்சை மற்றும் வெள்ளை அம்புக்குறியைத் தட்டலாம், அது இருப்பிடத்தைப் பகிரும்
    பயனர்கள் தங்கள் நேரடி இருப்பிடத்தை WhatsApp இல் அனுப்பியிருந்தால், அவர்கள் இருப்பிடத்தைப் பகிர்வதை நிறுத்துவதற்கான விருப்பமும் உள்ளது.
    அரட்டையில் உள்ள இருப்பிட அட்டையில் இருந்தே இதைச் செய்யலாம்.

    எந்த லொகேஷன் ஷேரிங் அம்சம் சிறந்தது?

    எந்த லொகேஷன் ஷேரிங் அம்சம் சிறந்தது?

    ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் சமீபத்திய புதுப்பிப்புகள் மூலம், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தை எல்லா நேரத்திலும் பகிர விரும்புகிறீர்களா அல்லது குறிப்பிட்ட பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது மட்டும் பகிர விரும்புகிறீர்களா என்று கேட்கப்படுவார்கள். இது ஒரு பயன்பாட்டை அனுமதியின்றி பயனர்களின் இருப்பிடத்தை அணுகுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். இனி வாட்ஸ்அப் இல் இருந்து லைவ் லொகேஷன் அனுப்புவதா அல்லது கரண்ட் லொகேஷன் அனுப்புவதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
What is the difference between Current and Live location on WhatsApp : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X