Just In
- 13 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- 13 hrs ago
ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!
- 13 hrs ago
பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!
- 14 hrs ago
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு: அண்ணன் மறைவு..வேட்பாளராக அப்பா-தேர்தல் பிரசாரத்தை ஜரூராக தொடங்கிய சஞ்சய் சம்பத்!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Movies
உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஃபிளைட்ல போறப்ப ஏன் Airplane mode ஆன் பண்ண சொல்றாங்க தெரியுமா? ஐயோ.! இதான் காரணமா?
விமானத்தில் (Aeroplane) அடிக்கடி பயணம் செய்யும் அனைவரும் இதை கட்டாயம் செய்திருப்போம்.. விமானம் புறப்படுவதற்கு முன்பாக உங்களிடம் இருக்கும் மின்னணு சாதனங்களை 'OFF' செய்யும்படி வலியுறுத்துவார்கள் அல்லது 'ஏர்பிளேன் மோடுக்கு (Airplane mode)' உங்களுடைய டிவைஸ்களை மாற்ற அறிவுறுத்துவார்கள். நீங்களும் உடனே உங்கள் டிவைஸை இந்த மோடுக்கு மாற்றிவிடுவீர்கள்.

அடேங்கப்பா.! ஏர்பிளேன் மோட் ON செய்ய சொல்வதற்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்கிறதா?
ஆனால், எதற்காக இந்த வேலையை நீங்கள் ஒவ்வொரு முறையும் விமானத்தில் பயணிக்கும் போது செய்யச் சொல்கிறார்கள்? என்று யோசித்தது உண்டா? இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், சரியான காரணத்தைத் தான் நீங்கள் தெரிந்து வைத்துளீர்களா என்று இப்போது படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிளைட்டில் ஏன் மின்னணு சாதனங்களை யூஸ் செய்ய கூடாது.!
விமானப் பயணத்தின் போது, ஏன் பயணிகளின் சாதனங்களைக் கட்டாயம் விமான பயன்முறைக்கு (Airplane mode) மாற்ற சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பிலைட் மோட் உண்மையில் சரியாக என்ன செய்கிறது? அழகான விமானப் பணிப்பெண்கள் ஏன் உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone), மொபைல் போன் (Mobile phone), டேப்லெட்டு (Tablet) மற்றும் லேப்டாப் (Laptop) போன்றவற்றை Airplane mode இல் வைத்திருக்கச் சொல்கிறார்கள் என்பதற்காகத் தெளிவான விளக்கம் இதோ.!

ஏர்பிளேன் மோட் (airplane mode) என்றால் என்ன?
ஏர்பிளேன் மோட் பொதுவாக உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது டேப்லெட்டில் உள்ள நெட்வொர்க் (network) அமைப்புகளை முடக்கம் செய்துவிடும். இந்த ஏர்பிளேன் மோட் ஐ செயல்படுத்த, நீங்கள் உங்கள் போனின் ஸ்மார்ட் செட்டிங்ஸ் மெனுவை அணுகலாம்.
இங்கு விமானம் போன்ற ஐகானைத் தேடி கிளிக் செய்தால் போதும், உடனே உங்கள் போனில் உள்ள சிக்னல் பார்கள் விமான ஐகானால் மாற்றப்படும். உங்கள் போனிற்கு வரும் நெட்வொர்க்குகள் அனைத்தும் துண்டிக்கப்படும்.

ஏர்பிளேன் மோட்-ஐ இயக்கினால் என்ன நடக்கும்?
நீங்கள் விமானப் பயன்முறை அல்லது பிளைட் மோட் (Flight mode) அல்லது ஏர்பிளேன் மோட் என்று எதை இயக்கினாலும், உங்கள் சாதனம் செல்லுலார் சிக்னல்களை (cellular signal) அனுப்புவதை நிறுத்தும்.
இதன் விளைவாக, உங்கள் செல்லுலார் நெட்வொர்க்கிலிருந்து அழைப்புகள் அல்லது மெசேஜ்களைப் பெற முடியாது. பொதுவாக இது உங்கள் வைஃபையையும் முடக்கும்.
ஆனால், உங்கள் விமானத்தில் வைஃபை நெட்வொர்க்கிற்கான அணுகல் இருந்தால், ஏர்பிளேன் மோட்டில் இருந்தாலும், உங்கள் சாதனத்தில் வைஃபையை (Wi-Fi) இயக்க முடியும்.

விமான பயணத்தின் போது ஏன் ஏர்பிளேன் மோட் கட்டாயம் இயக்கப்பட வேண்டும்?
உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களில் (electronics devices) இருந்து வெளிவரும் சிக்னல்கள் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளை உண்மையில் சீர்குலைக்கும். இது விமான (flight travel) பயணத்தை ஆபத்தானதாக மாற்றிவிடும்.
நீங்கள் அந்த நிலையில் இருக்க விரும்ப மாட்டீர்கள் என்று தான் நம்புகிறோம்.
பாதுகாப்பான விமான பயணத்தை உறுதி செய்ய விமான பயணத்தின் போது பயணிகளின் எலக்ட்ரானிக் டிவைஸ்களில் இயங்கும் நெட்வொர்க்குகளை நிறுத்தம் செய்ய அறிவுரைக்கப்படுகிறது.

ஐயையோ.! இதை செய்யாட்டி இவ்வளவு பெரிய ஆபத்து கூட வருமா?
செல்லுலார் இணைப்பைக் கொண்ட உங்கள் மின்னணு சாதனங்கள் சக்திவாய்ந்த ரேடியோ அலைகளையும் மின்காந்த குறுக்கீட்டையும் வெளியிடுகின்றன.
இவை ஒரு விமானத்தின் சிக்னல்களை குறுக்கிடலாம் மற்றும் விமானிக்கு ஏதேனும் தரை ஆதரவு பணியாளர்கள் அல்லது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் இணைப்பதில் சிரமங்களை ஏற்படுத்தலாம். இது சில நேரங்களில் ஆபத்தாக கூட முடியலாம்.
குறிப்பாக ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் விமானத்தில் பயணம் செய்வதால், போன்களின் சிக்னல் கூட்டு விளைவு மிகவும் அதிகமாக இருக்கும்.

இனி சீட் பெல்ட் மட்டுமில்லை.. இதுவும் முக்கியம்.! கவனிக்க மறக்காதீங்க.!
எனவே தான், விமானப் பணிப்பெண்கள் எப்போதும் பயணிகளிடம் தங்கள் ஸ்மார்ட்போன், மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்களை ஏர்பிளேன் மோட் அம்சத்தில் வைக்கச் சொல்கிறார்கள்.
பாதுகாப்பான வான் வழி பயணத்தை மேற்கொள்ள எப்போதும் உங்கள் விமான சீட் பெல்ட்டை போடும் போது, கூடவே உங்கள் போனை ஏர்பிளேன் மோட்டிற்கு மாற்றிவிடவும் மறக்காதீர்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470