ஆவணங்கள் எதுவும் தேவை இல்ல.. ஆதார் கார்ட்டில் எளிதாக முகவரி மாற்றுவது எப்படி?

|

குடும்பத் தலைவரின் (HoF) ஒப்புதலுடன் ஆன்லைனில் Aadhaar இல் உள்ள முகவரியைப் புதுப்பிக்கும் வகையிலான புதிய வசதியை UIDAI அறிமுகம் செய்துள்ளது. இனி ஆதாரில் உள்ள உங்கள் முகவரியை மாற்றம் செய்வதற்காக எந்த ஒரு கூடுதல் ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

முகவரி மாற்றம் செய்வது எப்படி?

முகவரி மாற்றம் செய்வது எப்படி?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் கார்ட் இல் உள்ள முகவரியை புதுப்பிக்க அல்லது மாற்றுவதற்கான புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய செயல்முறையில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், இனி ஆதார் பயனர்கள் எந்த வகையான ஆவணங்களையும் சமர்பிக்காமல் தங்கள் முகவரியை புதுப்பிக்கவும் மாற்றமும் செய்யலாம்.

புதிய வசதி அறிமுகம்

புதிய வசதி அறிமுகம்

குடும்பத் தலைவரின் (HoF) ஒப்புதலுடன் ஆன்லைனில் ஆதாரில் உள்ள முகவரியை புதுப்பிக்க உதவுவதற்கான வசதியை UIDAI கொண்டு வந்திருக்கிறது. ஆதாரில் கொண்டு வந்துள்ள இந்த அம்சம் வாடகை வீட்டுத்தாரர்கள் மற்றும் திருமணமாகி வேறு வீட்டுக்கு செல்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HoF ஆதார் எண் அடிப்படையில் மாற்றம் செய்யலாம்

HoF ஆதார் எண் அடிப்படையில் மாற்றம் செய்யலாம்

முகவரியில் மாற்றம் செய்வதற்கு ரேஷன் கார்ட், மார்க்ஷீட், திருமணச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை சமர்பிக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் OTP அங்கீகாரம் அடிப்படையிலும் முகவரி மாற்றம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணமானவர்கள் முகவரி மாற்றம் செய்யவும் இது பேருதவியாக இருக்கும். Head of Family(HoF) ஆதார் எண் அடிப்படையில் குடும்பத்தில் உள்ள மற்றவரின் ஆதார் எண்ணில் முகவரி மாற்றம் செய்யலாம்.

ஆதார் கார்ட் இல் முகவரியை மாற்றுவது எப்படி?

ஆதார் கார்ட் இல் முகவரியை மாற்றுவது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் ஆதார் போர்ட்டலுக்குச் செல்லவும். https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

ஸ்டெப் 2: ஆன்லைனில் முகவரியை புதுப்பிக்க, அதில் காட்டப்படும் புதிய விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: இதில் Head of Family(HoF) இன் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், HOF இன் போதுமான தனியுரிமையைப் பராமரிக்க, HOF இன் ஆதார் பற்றிய வேறு எந்தத் தகவலும் திரையில் காட்டப்படாது.

முகவரி மாற்றம் கோரிக்கை

முகவரி மாற்றம் கோரிக்கை

ஸ்டெப் 4: HOF இன் ஆதார் எண் சரிபார்ப்பு செய்த பிறகு, நீங்கள் அவர்களுடன் ஆன உறவுச் சான்று ஆவணத்தை பதிவேற்ற வேண்டும்.

ஸ்டெப் 5: இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஸ்டெப் 6: வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, சேவை கோரிக்கை எண் (SRN) பகிரப்படும். தொடர்ந்து முகவரி மாற்றம் கோரிக்கை குறித்து HOFக்கு SMS அனுப்பப்படும்.

ஸ்டெப் 7: அறிவிப்பு பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் HOF முகவரி மாற்றம் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். இதையடுத்து உங்கள் முகவரி மாற்றம் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

ஆதார் மையம் செல்வது அவசியம்

ஆதார் மையம் செல்வது அவசியம்

ஆதாரில் எந்தவொரு மாற்றத்தை மேற்கொள்வதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் என்பது மிக அவசியம். குறிப்பிட்ட தகவல்களை நாமே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆனால் சில முக்கிய தகவல்களை மாற்றுவதற்கு ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அதன்படி ஆதார் கார்ட் இல் முகவரி மாற்றம் செய்வதற்கு ஆதார் மையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆவணத்தை பூர்த்தி செய்வது அவசியம்

ஆவணத்தை பூர்த்தி செய்வது அவசியம்

உங்கள் அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்துக்கு செல்ல வேண்டும். அங்கு ஆதார் புதுப்பிப்பு / திருத்தம் என்ற படிவித்தை நிரப்ப வேண்டும். நீங்கள் ஆதாருடன் இணைக்க விரும்பும் மொபைல் எண்ணை படிவத்தில் இணைக்கவும். உங்கள் படிவத்தை நன்கு சரிபார்த்து ஆதார் நிர்வாகியிடம் சமர்பிக்க வேண்டும்.

90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்

90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்

இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். படிவம் சமர்பித்த பிறகு புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) அடங்கிய ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி உங்களுக்கு வழங்குவார். இந்த URN எண்ணை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம். மொபைல் எண் 90 நாட்களுக்குள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
UIDAI introduced New Way to Update or Change Address in Aadhaar Card: How to Do?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X