2014 ஆம் ஆண்டின் டாப் 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்

By Meganathan
|

இந்தாண்டின் சிறந்த தொழில்நுட்பங்களின் பட்டியல். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எல்லைகளை கடந்து தினமும் பல புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதே போன்று 2014 ஆம் ஆண்டு தொழில்நுட்ப சந்தை சிறப்பான வளர்ச்சியடைந்தது. ஆண்டு துவக்கத்தில் இருந்து பல கண்டுபிடிப்பு உங்களை கவர்ந்திருக்கும், அதன்படி இந்தாண்டின் இறுதியில் இன்று 2014 ஆம் ஆண்டின் டாப் 10 தொழில்நுட்பங்களின் பட்டிலை பார்ப்போமா.

டைம்ஸ் பத்திரிக்கையின் டாப் 25 சிறந்த தொழில்நுட்பங்களில் இருந்து 2014 ஆம் ஆண்டின் டாப் 10 தொழில்நுட்பங்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

1

1

கைகளை நீட்டி செல்ஃபி எடுக்க உதவும் செல்ஃபி ஸ்டிக் இந்தாண்டின் டைம்ஸ் பத்திரிக்கையின் சிறந்த கண்டுபிடிப்புகளில் இடம் பிடித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் வெறும் குறிச்சொல்லாக இருந்து 2014 ஆம் ஆண்டில் கலாச்சார அம்சமாக செல்ஃபிக்கள் கருதப்படுகின்றன, என்று டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2

2

இந்தாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மங்கள்யான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூபாய் 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் க்ராவிட்டி படத்தின் பட்ஜெட்டை விட குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

3

மற்ற ஸ்மார்ட்வாட்ச்களை விட சிறப்பாக இயங்க ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள் தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களை அளிக்கின்றது.

4

4

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தகவல்களை பாதுகாக்க ப்ளாக்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆன்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

5

5

மைக்ரோசாப்டின் புதிய கண்டுபிடிப்பானது லாப்டாப் சக்தியை 12 இன்ச் டேப்ளெட்டில் கொடுத்துள்ளது

6

6

விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இந்த காட்ரிட்ஜ் டயாலிசிஸ் இயந்திரத்துடன் இணைந்து எபோலாவுக்கு எதிராக போராடும். இதில் இருக்கும் லெக்டின் பில்டர் எபோலா கிருமிகளை ரத்தத்தில் இருந்து இழுத்து கொள்ளும் தன்மை கொண்டது.

7

7

இதன் மூலம் தரையில் இருந்து 1 இன்ச் உயரத்தில் பறக்க முடியும், மேலும் இதன் பேட்டரி 15 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்

8

8

இது எவிவித பொருட்களையும் ப்ரின்ட் செய்யும், 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை நிறைய பொருட்கள் 3டி ப்ரின்ட் செய்யப்பட்டுள்ளன

9

9

உலகின் சிறிய ப்ரிட்ஜ் என கூலஸ்ட் கூலரை குறிப்பிடலாம். இதில் உணவு மற்றும் குளிர்பானங்களை வைத்து கொள்ள முடியும்

10

10

பார்க்க மோதிரம் போன்று இருந்தாலும் பெண்களுக்கு பயன்படும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் இணைக்கப்பட்டுள்ள இந்த ரிங்ளி ஸ்மார்ட்போனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை காட்டும்

Best Mobiles in India

English summary
Top 10 Best Inventions 2014. Here you will find the list of Top 10 Best Technology Inventions 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X