ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!

|

என்னதான் விலையுயர்ந்த கேட்ஜெட்கள் பயன்படுத்தினாலும் அதில் அதிகாரப்பூர்வ ஆப்பிள் லோகோ இருந்தால் அதற்கு தனி மதிப்பு தான். ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு தள்ளுபடி வழங்குவது வழக்கம் தான். ஆனால் MacBook Air M2 மற்றும் AirPods Pro போன்ற சாதனங்களுக்கு எப்போதாவது தான் தள்ளுபடி கிடைக்கும். அதன்படி தற்போது மேக்புக் ஏர் எம்2 மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ ஆனது அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ!

மேக்புக் ஏர் எம்2

விஜய் சேல்ஸ் தளத்தில் மேக்புக் ஏர் எம்2 ஆனது எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ரூ.10,05,500 என தொடக்க விலையில் கிடைத்தது. தற்போது இந்த மேக்புக் ஏர் எம்2-விற்கு தான் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இந்த மேக்புக்கை விஜய் விற்பனை தளத்தில் சிறந்த சலுகையுடன் வாங்கலாம். அதேபோல் செகண்ட் ஜென் ஏர்பாட்ஸ் ப்ரோவை ஆப்பிள்.இன் தளம் மூலமாக தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை தளம்

ஆப்பிள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ விற்பனை தளத்தில் பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கி வருகிறது. ஐபோன், லேப்டாப், வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட பல கேட்ஜெட்கள் இதில் அடக்கம். அதன்படி சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 14 மாடலை ஆப்பிள்.இன் மூலமாக ரூ.72,900 என வாங்கலாம். இந்த தள்ளுபடி விலையில் வங்கிச் சலுகைகளும் அடங்கும். சரி, மேலே குறிப்பிட்டது போல் மேக்புக் ஏர் எம்2வை தள்ளுபடி விலையில் வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வங்கி சலுகை

மேக்புக் ஏர் எம்2-க்கு ஆப்பிள்.இன் தளத்தில் ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தள்ளுபடியை பெறுவதற்கு குறிப்பிட்ட வங்கி கார்ட்களை பயன்படுத்த வேண்டும். மேக்புக் ஏர் எம்2 ஆனது ஆப்பிள்.இன் தளத்தில் ரூ.1,19,900 என்ற தொடக்க விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது இந்த மேக்புக் இன் அசல் விலை ஆகும். ஆனால் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மூலம் இந்த மேக்புக்கை வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். அதன்படி மேக்புக் ஏர் எம்2வை ரூ.1,09,900 என வாங்கலாம்.

அதிரடி காட்டும் விஜய் சேல்ஸ்

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. அதாவது விஜய் சேல்ஸ் விற்பனை தளத்தில் மேக்புக் ஏர் எம்2 ஆனது குறைந்த விலையில் கிடைக்கிறது. அதாவது விஜய் சேல்ஸ் தளத்தில் மேக்புக் ஏர் எம்2 ஆனது ரூ.1,05,500 என்ற தொடக்க விலையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனுடன் கூடுதலாக வங்கி சலுகைகள் கிடைக்கிறது. அதன்படி விஜய் சேல்ஸ் தளத்தில் மேக்புக் ஏர் எம்2வை குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் இந்த மேக்புக்கை ரூ.95,500 என்ற விலையில் வாங்கலாம். புதிய எம்2 சிப்செட் உடன் கூடிய சமீபத்திய மேக்புக் இதுவாகும்.

குறுகிய காலம் மட்டுமே

விஜய் விற்பனை தளத்தில் குடியரசு தின விற்பனை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக் ஏர் எம்2-வை அதீத தள்ளுபடி விலையில் விஜய் சேல்ஸ் வழங்க இதுவே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது இந்த சலுகை நீண்ட காலம் கிடைக்காது என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் எம்2 இந்த சலுகை விலையில் வாங்கத் திட்டமிட்டால் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ!

ஏர்பாட்ஸ் ப்ரோ

ஏர்பாட்ஸ் ப்ரோவிற்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கையில், இந்த ஏர்பாட்ஸ் ஆனது ஆப்பிள்.இன் தளத்தில் ரூ.26,900 என பட்டியலிடப்பட்டுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மூலம் இந்த ஏர்பாட்ஸ் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ ஆனது பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் ரூ.24,900க்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது. உங்களிடம் மேலே குறிப்பிட்டுள்ள வங்கி கார்ட் இல்லை என்றால் அமேசான் அல்லது பிளிப்கார்ட் தளத்தை அணுகலாம்.

Best Mobiles in India

English summary
Time to Switch on Apple Products: MacBook Air M2, Airpods Pro Available with Huge Discount Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X