ஈா்ப்பு விசையின் 300 ஆண்டுகள்: ஸ்டீபன் ஹாக்கிங் சொல்ல வந்த ரகசியம் என்ன?

By Abu Bakker Fakkirmohamed

  இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி தன்னுடைய 76-வது வயதில் மறைந்தார். "காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் 'A Brief History of Time' " என்னும் நூலின் ஆசிரியரான இவர், கேம்பிரிட்ஜில் உள்ள அவருடைய வீட்டில் அமைதியான முறையில் காலமானார்.

  ஈா்ப்பு விசையின் 300 ஆண்டுகள்:ஸ்டீபன் ஹாக்கிங் சொல்ல வந்த ரகசியம் என்ன

  அவருடைய வாழ்வைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே...

  கலீலேியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு நகரில், இயற்பியல் கோட்பாட்டாளரான ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனில் தங்களுக்கு வீடு இருந்தும் தன்னுடைய மகனை ஆக்ஸ்ஃபோர்டு நகரத்தில் வளர்த்து ஆளாக்க விரும்பினர் ஹாக்கிங்கின் பெற்றோர். காரணம், இரண்டாம் உலகப் போரின் காரணமாக இலண்டனைக் காட்டிலும் ஆக்ஸ்போர்டு நகரம்தான் பாதுகாப்பானதாக இருந்தது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கல்வியும் பட்டமும்

  புனித அல்பான்ஸ் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு தன் தந்தை படித்த கல்லூரியான ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார் ஹாக்கிங்.(1952)

  ஹாக்கிங் கணிதம் படிக்க விரும்பினார். ஆனால் அக்கல்லூரியில் கணிதப் பாடம் இல்லை. அவருடைய தந்தை மருத்துவம் படிக்க அறிவுறுத்தினார். ஆனால், ஹாக்கிங் இயற்பியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தார். மிகுந்த அா்ப்பணிப்பு உணர்வோடு படித்த ஹாக்கிங் மூன்றாண்டு முடிவில் இயற்கை அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றார்.

  விருதுகளும் கௌரவப் பட்டங்களும்

  பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் 13 கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து அரசின் மிக உயரிய விருதான பிரிட்டிஸ் அரச கமாண்டர் (CBE) விருது (1982), கம்பேனியன் ஆப் ஹானர் விருது (1989), சுதந்திரத்துக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் (2009) ஆகியவை அவற்றுள் சில.

  இவர் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். அடிப்படை இயற்பியல் பரிசு (2013), கோப்ளே பதக்கம் (Copley Medal) (2006), வோல்ஃப் அறக்கட்டளை (Wolf Foundation) பரிசு (1988) ஆகியவை அவற்றுள் சில. இங்கிலாந்து ராயல் சொசைட்டி மற்றும் அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.

  நோய்த் தாக்கமும் குடும்ப வாழ்க்கையும்

  இவருக்கு 21 வயது ஆகும் பொழுது, அம்யோடிராபிக் லேட்ரல் செலிரோசிஸ் (ALS) என்னும் மிக அரிய வகை நரம்பு நோய்த் தாக்குதலுக்கு இவர் உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்கின. சர்க்கர நாற்காலியில் இருந்து கொண்டு கணிப்பொறி உதவியுடன் தன்னுடைய கோட்பாட்டு இயற்பியல் ஆராய்ச்சிகளை நிகழ்த்தினார் ஹாக்கிங். சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பல இடங்களுக்கும் சென்று இயற்பியல் தொடர்பான ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இவருக்கு, மனைவியும் மூன்று குழந்தைகளும், மூன்று பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

  புத்தகங்களும் ஆய்வுக் கட்டுகைளும்

  இவர் தன்னுடைய இயலாமைக்கு இடையிலும் முயன்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்கள் அதிக அளவில் விற்றுச் சாதனை படைத்தன. "காலத்தின் சுருக்கமான வரலாறு", "கருத்துளை, பிஞ்சுப் பிரபஞ்சம் மற்றும் பிற கட்டுரைகள்", " பிரபஞ்சம் பற்றிய சுருக்கக் குறிப்பு", "மகா வடிவமைப்பு", " என்னுடைய சுருக்கமான வரலாறு" ஆகியவை இவர் எழுதிய புகழ்ப்பெற்ற புத்தகங்கள் ஆகும். ஆய்வாளர்களுடன் இணைந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். " காலம்- வெளி ஆகியவற்றின் மிகப்பெரும் கட்டமைப்பு", "பொதுச் சார்பியல் கோட்பாடு : ஐன்ஸ்டின் நூற்றாண்டு ஆய்வு", "ஈா்ப்பு விசையின் 300 ஆண்டுகள்" ஆகியவை இவருடைய ஆய்வுக் கட்டுரைகளுள் சிலவாகும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  The End Of An Era Interesting Facts About Stephen Hawking: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more