Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 360 டிகிரி ஆர்மர் பாடி.. 50MP கேமரா.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்தியாவில் சூப்பர்கூல் விசி சிஸ்டம், சூப்பர் லார்ஜ் 7000mAh பேட்டரி, 120Hz அல்ட்ரா பிரைட்னஸ் அமோலெட் டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங் மற்றும் 360 ஆர்மர் பாடியுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஓப்போ எப்31 5ஜி (OPPO F31 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. மார்கெட் விலையில் இருந்து மலிவாக கிடைக்கிறது.

பிரீமியம் பில்ட் குவாலிட்டியுடன் ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருந்தால், இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல், MIL-STD-810H சர்டிபிகேஷன் கொடுக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 360 டிகிரி ஆர்மர் பாடி!

இது மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சர்டிபிகேஷனாக இருக்கிறது. மேலும், டிஸ்பிளேவுக்கு டிடி ஸ்டார் டிபிளஸ் ப்ரொடெக்சன் (DT-Star D+ Protection) கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட டியூரபிலிட்டி பீச்சர்களுடன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,350 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது.

அதாவது, 3 சதவீத தள்ளுபடியுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.26,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,350 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,649 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.1,000 தள்ளுபடியானது இஎம்ஐ ஆப்ஷனுக்கு கிடைக்கிறது.

ஓப்போ எப்31 5ஜி அம்சங்கள் (OPPO F31 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எனர்ஜி (6nm Octa Core MediaTek Dimensity 6300 Energy) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் பிரிகொன்சி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த்தை கொடுத்து உள்ளது.

1.67 எம்எம் தின் பெசல்களுடன் ஸ்லீக் டிஸ்பிளே லுக் கொடுக்கிறது. ஓம்னிவிஷன் நிறுவனத்தின் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் உள்ளது. மேலும், 2 எம்பி டெப்த் கேமராவானது, கேலக்ஸி கோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சாருடன் வருகிறது.

வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி உள்ளது. 5 வருடங்களுக்கு டியூரபிள் கொடுக்கும். ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொடுத்து உள்ளது. சூப்பர்கூல் விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F31 5G With 50MP Camera Available At Rs 1350 Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X