Home
Mobile

இன்னமும் மவுசு குறையாத 5000mAh பேட்டரி Nothing 5ஜி போன்.. Amazon-ல் விலை குறைப்பு.. Flipkart-ல் விலை ஏற்றம்!

நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 3 சீரீஸின் கீழ் கடந்த ஆகஸ்ட் 2025 இல் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite) மாடலானது "இன்னமும் மவுசு குறையாத ஒரு ஸ்மார்ட்போன்" ஆக உள்ளது!

ஏனென்றால் அறிமுகம் செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் கூட இந்த ஸ்மார்ட்போனின் மீது பெரிய விலை குறைப்பு எதுவுமே அறிவிக்கப்படவில்லை. மாறாக (தற்போது சந்தையில் நிலவுவரும் விலை உயர்வு போக்கில் சிக்கி), இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 அதிகரிப்பை தான் கண்டுள்ளது. அதுவும் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பிரத்யேகமாக விற்பனை செய்யும் - பிளிப்கார்ட் தளத்தில்!

5000mAh பேட்டரி Nothing 5ஜி போன்.. Amazon-ல் விலை குறைப்பு!

நினைவூட்டும் வண்ணம், இந்திய சந்தைக்கு வந்த போது நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் வாங்க கிடைத்தது. ஆனால் தற்போது அதே பிளிப்கார்ட்டில் மேற்கண்ட வேரியண்ட்கள் முறையே ரூ.21,999 க்கும் மற்றும் ரூ.23,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆனால் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.20,363 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.636 நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. அசல் அறிமுக விலையுடன் (ரூ.20,999) ஒப்பிட்டு பார்த்தால், இது சிறிய விலைகுறைப்பாக தெரியும். ஆனால் பிளிப்கார்ட்டில் தற்போதுள்ள ரூ.21,999 என்கிற புதிய விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் - இது நல்ல விலைக்குறைப்பு தான்!

நத்திங் போன் 3ஏ 5ஜி லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.77-இன்ச் FHD+ (1080 × 2392 பிக்சல்ஸ்) பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் HDR ப்ரைட்னஸ்
- 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 1000Hz டச் சாம்பிளிங் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 2160Hz PWM டிம்மிங்

- ஆக்டா கோர் 4nm மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 2டிபி வரை விரிவாக்கலாம்
- பேக் பேனலில் கிளிஃப் லைட் நோட்டிபிகேஷன் இன்டிகேட்டர்

- ட்ரிபிள்-ரியர் கேமரா யூனிட்
- 1/1.57-இன்ச் சாம்சங் சென்சார் (f/1.88), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர்
- 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (f/2.2)
- 16-மெகாபிக்சல் (f/2.45) செல்பீ கேமரா

- 30fps இல் 4K ரெசல்யூஷனில் வீடியோ ரெக்கார்ட்
- 60fps வரை 1080p வீடியோ ரெக்கார்ட்
- 120fps இல் 1080p ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்ட்
- ட்ரூலென்ஸ் எஞ்சின் 4.0
- மோஷன் கேப்சர், போர்ட்ரெய்ட் ஆப்டிமைசர் மற்றும் நைட் மோட்

- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- முன் மற்றும் பின் பக்க பேனல்களுக்கு பாண்டா கிளாஸ் ( Panda Glass) ப்ரொடெக்ஷன்
- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- அளவீட்டில் 164×78×8.3மிமீ
- எடையில் சுமார் 199 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 3a Lite 5G Price Dropped in Amazon India At The Same Time Price Increased in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X