அடுத்த HMD போன் ரெடி.. 64எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
எச்எம்டி நிறுவனம் எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ (HMD Crest 2 Pro) மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ அம்சங்கள் (HMD Crest 2 Pro specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) உடன் இந்த எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் (Qualcomm's Snapdragon 4 Gen 4 chipset) உடன் புதிய எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி auxiliary கேமரா என்கிற ட்ரிபிளர் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வசதியுடன் இந்த எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளது.
6000mAh பேட்டரி உடன் எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய எச்எம்டி போன் அறிமுகமாகும்.
photos credits: smashx_60, hmd, gizmochina


Click it and Unblock the Notifications








