Redmi ருத்ர தாண்டவம்.. 10000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமராவுடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் அடுத்த நோட் சீரிஸ் (Note Series) ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை பற்றிய பிரம்மாண்டமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, சோதனையில் உள்ள ஒரு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 10000mAh பேட்டரியை பேக் செய்யவுள்ளது.
எந்த மாடல்? டிப்ஸ்டர் சரியான மாடல் பெயரை குறிப்பிடவில்லை. ஆனாலும் ரெட்மியின் அடுத்த நோட் சீரிஸ் என்றால் அது "வெளிப்படையாகவே" ரெட்மி நோட் 16 ப்ரோ சீரிஸ் தான். இந்த சீரீஸில் ஒரு மாடல் 10,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்றால் அது நிச்சயமான ஹை-எண்ட் மாடல் ஆன ரெட்மி நோட் 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 16 Pro Plus 5G) ஸ்மார்ட்போனாகத்தான் இருக்க வேண்டும்.

டிசிஎஸ் (DCS) பகிர்ந்துள்ள விவரங்களின் படி, 10000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 200எம்பி கேமரா கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் தற்போது சோதனையில் உள்ளது. முன்னரே குறிப்பிடத்தபடி, ஸ்மார்ட்போனின் பெயரையோ அல்லது பிராண்டின் அடையாளத்தையோ அவர் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் - இந்த அம்சங்கள் உண்மையாகும் பட்சத்தில் - அது ரெட்மி நோட் 16 ப்ரோ பிளஸ் மாடலாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 200எம்பி கேமராவுடன் வருகிறது. எனவே அடுத்த மாடலில் (ரெட்மி நோட் 16 ப்ரோ பிளஸ் 5ஜி) இவ்விரு விஷயங்களிலும் பெரிய மேம்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆக பேட்டரி கெப்பாசிட்டியை அதிகரித்தால் மட்டுமே போதுமானதாக இருக்கும். இது வெறும் யூகங்கள் தான்!
ஏனென்றால் சீனாவில் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்திய மாடலில் 6,500mAh பேட்டரி தான் உள்ளது. ஆக 10000mAh பேட்டரி என்பது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடாகவும், சந்தையில் மிகவும் அரிதான திறனாகவும் இருக்கும். இதுவரை, இந்தியாவில் ரியல்மி பி4 பவர் மற்றும் ரியல்மி நார்சோ பவர் ஆகிய 2 மாடல்கள் மட்டுமே 10,001mAh பேட்டரியை வழங்குகின்றன.
இதே பேட்டரி திறனுடன் வேறு பல போன்கள் அறிமுகப்படுத்தப்படாத பட்சத்தில், ரெட்மி நிறுவனம் அதன் நோட் 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுடன் "இந்த குறிப்பிட்ட பிரிவில்" நுழையும் இரண்டாவது நிறுவனமாக இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் பேட்டரிகளில் அதிக கவனம் செலுத்துவதால், இனிவரும் காலங்களில் 10,000mAh கூட ஒரு நிலையான திறனாக மாறுவதை நாம் காணலாம்.
இந்தியாவில் வாங்க கிடைக்கும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது காபி மோக்கா, மிராஜ் ப்ளூ மற்றும் கார்பன் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2
- கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன், 1.5K ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்ட 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்.
- OIS உடன் கூடிய 200 மெகாபிக்சல் மெயின் கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி.


Click it and Unblock the Notifications








