கொடுத்த வச்ச இந்தியர்கள்.. 8000mAh பேட்டரி உடன் மேலும் ஒரு புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் பேக் டூ பேக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகங்களை செய்ய உள்ளது போல் தெரிகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், அதே நோர்ட் 6 சீரீஸின் கீழ் 8000mAh பேட்டரி கொண்ட இன்னொரு புதிய ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. என்ன மாடல்? என்ன விலைக்கு வரும்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord CE 6 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் 5ஜி (OnePlus Nord CE 6 Lite 5G) ஆகிய 2 மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
என்னென்ன அம்சங்கள்? 91மொபைல்ஸ்-ன் சமீபத்திய அறிக்கை, வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும், அது பெரும்பாலும் சிலிக்கான்-கார்பன் வகையாக இருக்கும் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறுகிறது.
இது முந்தைய மாடலான நோர்ட் சிஇ 5 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள 7100mAh பேட்டரிஉடன் ஒப்பிடும் போது நல்ல அப்கிரேட் ஆகும். 2026 இல் "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் ஒன்பிளஸ் நிறுவனமும் அதை நோக்கி செல்வதாக தெரிகிறது. ஏனெனில் வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனில் ஒரு பிரம்மாண்டமான 9000mAh பேட்டரி இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் உடன் வரும் என்றும், இது பெரும்பாலும் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆக இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் ஆப்ஷனையும் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஒயிட் என குறைந்தபட்சம் இரண்டு கலர்களில் வெளிவரலாம். இதுதவிர்த்து மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.
எப்போது அறிமுகம்? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மற்றும் நோர்ட் சிஇ 6 லைட் ஆகிய 2 மாடல்களும் மே 2026 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு சரியான வெளியீட்டு தேதி இல்லை. இதுகுறித்த அறிவிப்பு ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் நடந்து முடிந்த, சில நாட்களுக்கு பின்னர் வெளியாகலாம்
என்ன விலைக்கு வரலாம்? நோர்ட் சிஇ 6 மற்றும் நோர்ட் சிஇ 6 லைட்டின் "உடனடி அறிமுகம்" ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது இந்தியாவில் நடுத்தர விலைப்பிரிவில் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்துவதாக தெரிகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடல் ஆனது ரூ.40,000 க்கும் குறைவான விலைப்பிரிவை இலக்காக கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நோர்ட் சிஇ 6 அதைவிட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
OPINION - உலகளவில், ஸ்மார்ட்போன்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக உயர்ந்து வருவதால், நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலை விட சற்று விலை உயர்வை காணலாம். ஆனாலும், உங்களுக்கு பேட்டரி லைஃப் முக்கியம் என்றால், மேலும் நீங்கள் ரூ.30,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு ;லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை போனை வாங்க விரும்பினால், ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் நார்ட் சிஇ 6 லைட் மாடல்களுக்காக காத்திருப்பது நல்லது!


Click it and Unblock the Notifications








