Home
Mobile

ஏப்ரல் 7 அறிமுகமாகும் 9000mAh பேட்டரி OnePlus 5ஜி போனின் விலை இவ்ளோ தானா... எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அதன் புதிய ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது பெரிய 9000எம்ஏஎச் பேட்டரி உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால்.. இந்த ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகி.. இதன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. அப்படியாக ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஏப்ரல் 7 அறிமுகமாகும் 9000mAh பேட்டரி OnePlus 5ஜி போனின் விலை?

என்ன விலை? டிப்ஸ்டர் தேபயன் ராய் (Debayan Roy) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.35,000 க்கு மேல் என்கிற விலை நிர்ணயத்தை பெறக்கூடும். சரியான ஆரம்ப விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த போன் ரூ.40,000-க்கும் குறைவான பிரிவில் தான் என்று நம்பலாம்

முந்தைய நார்ட் சீரீஸ் மாடல்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க விலை உயர்வாகும், ஆனால் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இடம்பெற உள்ள மற்றும் இடம்பெற உள்ளதாக கூறப்படும் அம்சங்களையோ வைத்து பார்க்கும் போது இந்த விலை - ஒரு ஏமாற்றமாக இல்லாமல், ஒரு ஆச்சரியமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பழைய மாடல்களின் விலைகள்: ஒப்பிடும் போது முன்னதாக வந்த ஒன்பிளஸ் நார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.31,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம் ஒன்பிளஸ் நார்ட் 4 மற்றும் ஒன்பிளஸ் நார்ட் 3 ஆகியவைகள் முறையே ரூ.29,999 மற்றும் ரூ.33,999 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் ஒன்பிளஸ் அதன் நார்ட் சீரிஸில் ஒரு நிலையான விலை நிர்ணய முறையை பின்பற்றவில்லை என்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. எனவே அடுத்து வரும் மாடலின் சரியான விலையை கணிப்பது எப்போதுமே கடினம் தான். ஆனால், அதிகரித்து வரும் உதிரிபாகங்களின் விலை மற்றும் இன்னும் சக்திவாய்ந்த ஹார்ட்வேர் காரணமாக, நார்ட் 6 ஆனது ரூ.30,000-ஐ சுற்றிய விலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு குறைவு; ரூ.40,000 க்குள் வர அதிக சாத்தியம்!

அப்படி என்ன சக்திவாய்ந்த ஹார்ட்வேர்கள்? ரூ.35,000 - ரூ.40000 என்கிற சாத்தியமான விலை உயர்வை ஜீரணிக்க எளிதாக்குவது, ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் 6 மாடலில் பொருத்தவிருப்பதாகக் கூறப்படும் ஹார்ட்வேர் அம்சங்கள்தான். இந்த ஸ்மார்ட்போன் 9,000mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்பதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

இது - குறிப்பிட்ட விலைப்பிரிவில் அரிதாகவே காணப்படும் ஒரு அம்சம் ஆகும். இதுவே ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விற்பனை அம்சமாக இருக்கவும் வாய்ப்புள்ளது, ஏனெனில் முடிந்தவரை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்ககூடிய ஒரு ஸ்மார்ட்போனை யார் தான் விரும்ப மாட்டார்கள்?

பெர்ஃ பார்மென்ஸை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனம் - ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிக திறன் தேவைப்படும் கேம்களை 165fps வரை கையாளும் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது; ஆக இதில் 165Hz டிஸ்பிளே இருப்பதையும் "மறைமுகமாக" உறுதி செய்யப்பட்டுள்ளது

லீக் ஆன தகவல்களின்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதிக ப்ரைட்னஸ் மற்றும் மேம்பட்ட டிம்மிங் ஆதரவுடன் கூடிய 6.78-இன்ச் 1.5K OLED பேனலை பேக் செய்யலாம். கேமராக்கள் குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, இந்த போனில் OIS உடன் கூடிய 50-மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி முசென்சார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் இடம்பெறக்கூடும்.

முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற வாய்ப்புள்ளது. கேமரா டிசைன் ஆனது முன்னதாக வெளியான ஹைஎண்ட் ஒன்பிளஸ் மாடல்களை பின்பற்றலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, நார்ட் 6 ஆனது LPDDR5X ரேம், UFS 4.1 ஸ்டோரேஜ், வைஃபை 7 மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP மதிப்பீடு ஆகியவற்றுக்கான ஆதரவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 April 7 India Launch Round Up Design Display Chipset Camera Battery Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X