ஏப்ரலில் இன்னொரு புது OnePlus அல்ட்ரா போன்.. 5ஜி, 8000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 165Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி மாடலின் இந்திய அறிமுகத்திற்கு சில நாட்களே உள்ளது. இது வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதை தொடர்ந்து - இதே ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸின் கீழ் உள்ள இன்னும் மலிவான மாடல்கள் ஆக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஆகிய மாடல்கள் மே 2026 இல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்தியாவில் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் அதே 2026 ஏப்ரல் மாதத்தில் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்கிறது.
சுவாரஸ்யமாக இன்னொரு சைனீஸ் பிராண்ட் ஆன ரெட்மியும் அதே ஏப்ரலில் அதன் அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக, டிப்ஸ்டர் டிசிஎஸ் குறிப்பிட்டுள்ளார். அது ரெட்மி கே90 அல்ட்ரா ஸ்மார்ட்போனாகும். இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு போன்களும் ஒரே மாதிரியான பல அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது இரண்டு போன்களும் மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப் மூலம் இயக்கப்படலாம், மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8,000mAh திறன் கொண்ட பேட்டரிகள், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் மிகவும் மென்மையான 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளேக்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மாடல்கள் தான் இந்தியாவில் நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களாக வருவதால். ஒன்பிளஸ் நோர்ட் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மீது ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இப்போதைக்கு அது எந்த மாடல் ஆக ரீபிராண்டட் செய்யப்படும் என்பதில் தெளிவு இல்லை.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? 91மொபைல்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும், அது பெரும்பாலும் சிலிக்கான்-கார்பன் வகையாக இருக்கும். இது முந்தைய மாடலான நோர்ட் சிஇ 5 மாடலில் உள்ள 7100mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது நல்ல அப்கிரேட் ஆகும்.
மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் உடன் வரும் என்றும், இது பெரும்பாலும் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆக இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் ஆப்ஷனையும் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஒயிட் என குறைந்தபட்சம் இரண்டு கலர்களில் வெளிவரலாம். இதுதவிர்த்து மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.
முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மற்றும் நோர்ட் சிஇ 6 லைட் ஆகிய 2 மாடல்களும் மே 2026 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு சரியான வெளியீட்டு தேதி இல்லை. இதுகுறித்த அறிவிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி நடக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்திற்கு பின்னர் வெளியாகலாம்
விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மற்றும் நோர்ட் சிஇ 6 லைட் ஆகிய இரண்டுமே மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவில் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்துவதாக தெரிகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடல் ஆனது ரூ.40,000 க்கும் குறைவான விலைப்பிரிவை இலக்காக கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நோர்ட் சிஇ 6 அதைவிட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








