Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.11,399 போதும்.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

போகோ சி85 5ஜி (POCO C85 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடியுடன் பட்டையை கிளப்பி வருகிறது. மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்து உள்ளது. 120Hz டிஸ்பிளே, டைமன்சிட்டி 6300 சிப்செட்டுடன் பட்ஜெட்டில் மிரள வைத்துள்ளது. இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் டூயல் டோன் பினிஷிங் கொண்ட பாடி மட்டுமல்லாமல், குவாட் கர்வ்ட் பேக் டிசைனில் பட்ஜெட்டைவிட கூடுதலாக லுக் கொடுக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இருக்கிறது. இந்த விலையில் மற்ற நிறுவனங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கொடுக்கும். ஆனால், இதில் ரிவர்ஸ் சார்ஜிங் கூடுதலாக கொடுக்கப்பட்டு உள்ளது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.11,399 போதும்.. 6000mAh பேட்டரி!

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.600 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.11,399 விலைக்கு இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த செக்மெண்ட்டில் எதிர்பார்க்க முடியாதபடி 2 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கொடுக்கிறது. 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெற்று கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் 2.2 (HyperOS 2.2) கிடைத்துள்ளது. மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple), ஸ்பிரிங் கிரீன் (Spring Green) மற்றும் பவர் பிளாக் (Power Black) கலர்களில் கிடைக்கிறது.

போகோ சி85 5ஜி அம்சங்கள் (POCO C85 5G Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. எச்பிஎம் மோடில் 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கும்.

ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கும். 4 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கும். 6000mAh பேட்டரியை இந்த போகோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இது வரவேற்க வேண்டியதாகும்.

இந்த பேட்டரியுடன் 7.99 மிமீ தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொண்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C85 5G With 4GB RAM 128GB Storage Available At Rs 11399 on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X