புதுசா டிவி வாங்க போறீங்களா? 4K தரத்தில் நச்சுனு படம் பார்க்க Samsung Crystal 4K Neo TV தான் பெஸ்டா?

|

புதுசா ஸ்மார்ட் டிவி வாங்குற ஐடியா இருக்கா? நச்சுனு 4K தரத்தில் பெஸ்டான அனுபவத்துடன் உங்களுடைய டிவி அனுபவம் அமைய வேண்டுமா? அப்படினா, இப்போது சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மிரட்டலான ஸ்மார்ட் டிவி மாடலை கொஞ்சம் பாருங்க. உங்களுடைய பட்ஜெட் விலைக்குள் பிரமாதமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை என்ன? இதை எங்கு வாங்கலாம்? போன்ற தகவலை அறிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ டிவி (Samsung Crystal 4K Neo TV)

சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ டிவி (Samsung Crystal 4K Neo TV)

சாம்சங் நிறுவனம் தனது ஃபோர்ட்போலியோவில் புதிதாக 43 இன்ச் கிரிஸ்டல் 4K நியோ டிவியை ஸ்மார்ட் அம்சங்களுடன் இந்தியச் சந்தையில் நேற்று (திங்கள்) அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ டிவி (Samsung Crystal 4K Neo TV) ஆனது சிறந்த படத் தரத்திற்காக கிரிஸ்டல் தொழில்நுட்பத்துடன் 43' இன்ச் UHD டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 32' இன்ச் டிஸ்பிளேவை விட இதில் கட்சி அனுபவம் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையில் தெளிவான படங்களைப் பார்ப்பது சிறப்பு.

HDR10+ ஆதரவுடன் கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டி

HDR10+ ஆதரவுடன் கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டி

இந்த டிஸ்பிளே HDR10+ ஆதரவுடன், 1 பில்லியன் ட்ரூ கலர்ஸ் (One Billion True Colors) மற்றும் Crystal 4K செயலி பிராசஸர் கொண்ட ஆதரவுடன் வருகிறது. Crystal 4K Neo TV என்பது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிரட்டலான புது வடிவ வடிவமைப்பின் சரியான கலவை என்று சாம்சங் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இது ஒரு அதிவேக உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்திற்காகச் சிறந்த டெப்த் மற்றும் டீப்பா கான்ட்ராஸ்ட்களுடன் கண்ணைக் கொள்ளைகொள்ளும் துடிப்பான வண்ணம் நிறைந்த அம்சங்களுடன் வருகிறது.

27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் பெருமிதமாக விளம்பரம்

சாம்சங் நிறுவனம் பெருமிதமாக விளம்பரம்

சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ டிவி ஆனது, இதுவரை வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்திடாத சிறந்த டிவி அனுபவத்தை மேம்படுத்தி வழங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று சாம்சங் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக நுகர்வோர் மின்னணுவியல் மூத்த இயக்குனர் சந்தீப் சிங் அரோரா கூறியுள்ளார். சரி, இப்படி சாம்சங் நிறுவனம் பெருமிதமாக விளம்பரம் செய்யும் இந்த ஸ்மார்ட் டிவியில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது, இந்த சாதனத்தை இந்திய வாடிக்கையாளர்கள் என்ன விலையில் எங்கிருந்து வாங்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Samsung கிரிஸ்டல் 4K நியோ டிவி விலை

Samsung கிரிஸ்டல் 4K நியோ டிவி விலை

சாம்சங் நிறுவனத்தின் புதிய கிரிஸ்டல் 4K நியோ டிவி 43' இன்ச் ஸ்கிரீன் வேரியண்டில் வருகிறது. இது, சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் தளமான Samsung Shop மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டலான Amazon இந்தியா மற்றும் Flipkart வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும். இந்த புதிய Samsung Crystal 4K Neo TV இப்போது வெறும் ரூ.35,990 என்ற விலைக்கு வாங்க கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இருந்து இந்த டிவியை வாங்கும் நுகர்வோர், அமேசான் ப்ரைமின் ஒரு வருட மெம்பர்ஷிப்பை பெறுகிறார்கள்.

ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?

இந்த புதிய ஸ்மார்ட் டிவியை சலுகையுடன் எங்கு வாங்கலாம்?

அதேபோல், பிளிப்கார்ட் தளம் மூலமாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த டிவியை வாங்கும் போது டிஸ்னி ஹாட்ஸ்டார் சேவைக்கான ஒரு வருட மெம்பர்ஷிப் நன்மையும் கிடைக்கிறது. இது தவிர, Samsung Crystal 4K Neo TV-யை வாங்கும் போது, SBI மற்றும் HDFC வங்கி போன்ற முன்னணி வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாத கால வட்டி இல்லாத EMI விருப்பமும் பயன்படுத்தக் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. EMI மூலம் டிவி வாங்க நினைத்தால் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Samsung Crystal 4K Neo TV இல் என்னவெல்லாம் இருக்கிறது?

Samsung Crystal 4K Neo TV இல் என்னவெல்லாம் இருக்கிறது?

இந்த புதிய சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ டிவி வாய்ஸ் அஸிஸ்டன்ட் மற்றும் Samsung TV Plus போன்ற சில ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. நீங்கள் ஒரு கேமராக இருந்தால், உங்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய ஆட்டோ கேம் மோட் மற்றும் மோஷன் எக்ஸ்செலரேட்டர் அம்சங்கள் கூட இதில் உள்ளது என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு வேகமான ஃப்ரேம் டிரான்சிஷன் மற்றும் லோ- லேடன்சி அனுபவத்தை வழங்குகிறது.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

HDR10+ சப்போர்ட்

HDR10+ சப்போர்ட்

இந்த டிவி பெசல்-லெஸ் டிசைன் உடன், HDR10+ சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது உங்கள் டிஸ்பிளேவுக்கு தேவையான தெளிவு திறன் கொண்ட அட்டகாச கிளாரிட்டியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் கூகிள் அஸிஸ்டண்ட், அலெக்ஸா மற்றும் பிக்ஸ்பி ஆகியவற்றுடன் இணங்கக் கூடிய இணைப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாய்ஸ் மூலம் இயக்கலாம். குறிப்பாக சேனல்களை மாற்றுவது, சவுண்ட் அளவை குறைப்பது அல்லது அதிகரிப்பது போன்ற பல விஷயங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த டிவியை கம்ப்யூட்டராக கூட பயன்படுத்தலாமா?

இந்த டிவியை கம்ப்யூட்டராக கூட பயன்படுத்தலாமா?

இது இந்தியாவின் பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பட்டியலிலிருந்து பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைக் கண்டறிய உதவும் யூனிவேர்சல் கைடு அம்சத்தை இது கொண்டுள்ளது. இதை விட பெஸ்ட்டாக ஒரு அம்சம் இங்கிருக்கிறது, அது தான் சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ டிவியில் கிடைக்கும் புதிய PC மோடு அம்சம். இந்த அம்சம் பயனர்களின் டிவி டிஸ்பிளேவை ஒரு தனிப்பட்ட கம்ப்யூட்டராக மாற்ற அனுமதிக்கிறது.

இந்த டிவியை நம்பி வாங்கலாமா?

இந்த டிவியை நம்பி வாங்கலாமா?

இதன் மூலம் பயனர்கள் சிறிய லேப்டாப் திரையில் கூர்ந்து கவனித்துச் சிரமப்பட்டு வேலை பார்ப்பதை விட, பெரிய திரையில் கூலாக வேலை செய்யலாம். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் அம்சமும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கிளவுட் ஸ்டோரேஜ் உடன் கூட இந்த ஸ்மார்ட் டிவியை இணைத்து தாராளமாக ஸ்மார்ட்டா வேலை செய்யலாம். புதிதாக ஒரு ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்பவர்களுக்கும், சிறந்த புதிய அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஒரு மிரட்டலான ஸ்மார்ட் டிவி சாதனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த Samsung Crystal 4K Neo TV ஒரு வரப்பிரசாதம்.

Best Mobiles in India

English summary
Samsung launches affordable 43-inch 4K Neo TV in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X