அறிமுகமானது புதிய boAt ப்ரொஜெக்டர்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. 150 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
போட் (boAt) நிறுவனம் இந்தியாவில் தரமான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போட் நிறுவனம் புதிய போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் (boAt CineHead M1 Projector) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (boAt CineHead M1 Projector Specifications): 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். அதுவும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.

200 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (ANSI lumens brightness) கொண்டுள்ளது இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். ஆகவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த போட் ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மூலம் 30 இன்ச் முதல் 150 இன்ச் வரை புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 85 இன்ச், 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் பிலட்-இன் ஆப் ஸ்டோர் (built-in app store) ஆதரவும் உள்ளது. பயனர்கள் இதில் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் யூடியூப் போன்ற பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ்,மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என போட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் டூயல் 3W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட், ப்ளூடூத், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் ப்ரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.
போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் ரூ.10,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனத்தை அமேசான் தளத்தில் வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் கம்மி பட்ஜெட்டில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








